பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

25


உதாரணமாக, 40 குழந்தைகள் ஆட்டத்தில் பங்கு பெறுகின்றார்கள் என்றால், 39 சிறு வட்டங்களைப் போட வேண்டும்.

ஆடும் முறை: ஒவ்வொரு சிறு வட்டத்திலும் ஒவ்வொரு ஆட்டக்காரரை நிறுத்த வேண்டும். வட்டம் கிடைக்காத குழந்தைகள், இதில் ஆட்டத்தைத் தொடங்குபவராக இருக்க வேண்டும்.

அவர் தன் கையில் ஒரு குச்சியை அல்லது தடியை வைத்துக் கொண்டு, அதை மந்திரக்கோல் என்றும் கூறிக்கொள்ளலாம்.

அந்த மந்திரக் கோலால் 4 அல்லது 6 பேர்களைத் தொட்டு, அவர்களை 'என்னிடம் வா’ என்று அழைத்துவிட்டு, கொஞ்ச தூரம் கூட்டிக்கொண்டு போக வேண்டும்.

கொஞ்ச தூரம் போனதும், 'வீட்டிற்குப் போகலாம்' என்று மந்திரக் கோலர் சத்தமாகக் கூற வேண்டும். உடனே கூட வந்த எல்லோரும் தாங்கள் நின்று கொண்டிருந்த சிறு வட்டத்தை நோக்கி ஓடிப்போய் நின்று கொள்ள வேண்டும். வட்டத்திற்காக மந்திரக் கோலரும் ஓடுவார்.

இவர்களில் வட்டம் கிடைக்காதவர், மந்திரக் கோலராக மாறுகிறார். அவரும் ஒரு சிலரை அழைத்துக் கொண்டு போவார். ஆட்டம் முன்போலவே தொடர்ந்து நடக்கும்.


9. நாற்காலிப் போட்டி

(Music Hush)

ஆட்ட அமைப்பு: முதலில் ஒரு சிறிய வட்டம் போட வேண்டும். அதைச் சுற்றி 20 அல்லது 25 நாற்காலிகள்