பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

31


ஆடும் முறை: மத்தியில் நிற்கும் கைதிகள் தங்களுக்கு எதிரே உள்ள குழுவைக் கடந்து எதிரே தெரியும். கடைக் கோட்டினைப் (End line) போய் அடைந்து விட்டால் அவர்கள் தப்பித்துக் கொண்டு விடு

வார்கள்.

அதற்காக, தன்னை வலை போல் நின்று மாட்ட வரும் ஒரு குழுவின் ஆட்டக்காரர்களை கைதி சமாளிக்க வேண்டும். அந்தக் குழு ஆட்டக்காரர்கள் வலப்புறம் உள்ள ஆட்டக்காரரின் தலைமையில் (கைகள் கோர்த்த வண்ணமே) சுற்றி வளைத்துக் கொண்டு பிடிக்க வருவார். அந்த வலப்புற ஆட்டக்காரர் கையில் படாமல், மற்ற ஆட்டக்காரர்கள் இடையே புகுந்தும் அல்லது தொடப் படாமல் நெளிந்தும் அல்லது கோர்த்திருக்கும் கைகள் மேல் தாவியும் தப்பித்துக் கொள்ளலாம்.

o o

இவ்வாறு தொடப்படாமல் கடைக்கோட்டை அடைந்து விட்டால் வேறொருவர் கைதியாக மாறிட ஆட்டம் தொடரும்.

வலப்புறத்து ஆட்டக்காரரைத் தவிர, மற்ற ஆட்டக் காரர்கள் கைதியைத் தொட்டாலும் அல்லது பிடித்தாலும் அவர் பிடிபட்டவராக மாட்டார்.

தொட முயலும் ஆர்வத்தில் குழுவின் சங்கிலிப் பிணைப்பு எந்த நேரத்திலும் அறுந்து விடக்கூடாது.

குறிப்பு: கைதி வெளியே நின்று, ஆடுகள மைதானத்தை நோக்கித் தப்பிப் போகுமாறு செய்தும் ஆடலாம்.