பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஆட்டக்காரர், ‘என்னிடமிருந்து தப்பி ஓடுங்கள் பார்க்கலாம்’ என்று கத்திக் கூற வேண்டும். உடனே இந்த எல்லைக்கோட்டில் நிற்கும் குழுவினர் எதிர்ப்பக்கம் உள்ள எல்லைக்கோட்டிற்கும், அந்தக் குழு இந்தக் குழு இருக்கும் எல்லைக்கோட்டிற்கும் தப்பி ஓட வேண்டும்.

எல்லை நோக்கி ஓடுபவர்கள் தொடுபவரிடம் (it) சிக்கிக் கொள்ளாமல் ஓட வேண்டும்.

தொடுபவரால் தொடப்பட்டவர்கள் எல்லாம் விரட்டுபவருடன் சேர்ந்து கொள்கின்றார்கள். பிறகு மீண்டும் அவர்கள் 'தப்பி ஓடுங்கள் பார்க்கலாம்' என்று கத்த வேண்டும். எல்லோரும் ஓடும்போது இவர்கள் தொடுவார்கள்.

இவ்வாறு கடைசி ஒருவர் அல்லது எல்லோரும் தொடப்படும் வரை ஆட்டம் தொடரும்.

குறிப்பு: தப்பி ஓடுபவர்கள் கண்ட இடங்களுக்கெல்லாம் தப்பி ஓட முயலக் கூடாது. ஆசிரியர் குறிப்பிட்டு நிர்ணயித்திருக்கும் எல்லைக்குள்ளே தான் ஓட வேண்டும். மீறி ஓடுபவர்கள் தொடப்பட்டவராவார்கள்.


15. ஆனையும் ஆமையும்

(Crows and Cranes)

(காக்கையும் கொக்கும் என்றுதான் இந்த ஆட்டத்திற்குப் பெயர் தர வேண்டும். ஆங்கிலத்தில் CR, என்ற இரு வார்த்தைகளும் சேர்ந்தாற்போல் வந்து 0.A. என்று பிரிவதால் சொல்லி ஆட வசதியாக இருக்கும். தமிழில் கா, கொ என்று மாறி வருவதால் எதுகை மோனை சரியாக அமையவில்லை; பொருந்தவில்லை என்பதால்