பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

35


ஆனையும் ஆமையும் என்று ஓசைக்காக தமிழ்ப் பெயர் தந்திருக்கின்றேன்.)

ஆட்ட அமைப்பு: மாணவர்களை சம எண்ணிக்கையுள்ள இரண்டு குழுவாகப் பிரித்து நிறுத்த வேண்டும். பின் 6 அடி தூரம் இடைவெளி இருப்பதுபோல் கோடுகள் கிழித்து ஒவ்வொரு கோட்டிலும் ஒவ்வொரு குழுவையும் வரிசையாக, ஒருவரை ஒருவர் பார்ப்பதுபோல் நிறுத்தி வைக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவிற்குப் பின்புறமும் 60 அடிதுரத்தில் ஒரு எல்லைக்கோட்டைக் குறித்து வைத்திருக்க வேண்டும்.

ஒரு குழுவிற்கு ‘ஆனை’ என்றும், மற்றொரு குழுவிற்கு ‘ஆமை’ என்றும் பெயர் கொடுத்திருக்க வேண்டும்.

ஆடும் முறை: ஆசிரியர்தான் இந்த ஆட்டத்தை நடத்துகிறார். அல்லது அந்த வகுப்புத் தலைவரை அழைத்து ஆட்டத்தை நடத்துமாறு சொல்லலாம்.

முதலில் ‘ஆ’ என்று தொடங்கி ராகம் போடுவது போல மீண்டும் 'ஆ' என்று கூறி, பிறகு 'னை' என்றோ ‘மை’ என்றோ கூறலாம்.

‘ஆனை’ என்று கூறிவிட்டால் ஆனைக்குழுவினர் தமக்குப் பின்புறம் 60 அடி தூரத்தில் குறிக்கப்பட்டுள்ள கோடு நோக்கி ஓட வேண்டும்.

ஆமைக் குழுவினர் அவர்கள் கோட்டைத் தொடு முன்பாக அவர்களை விரட்டித் தொட வேண்டும்.

தொடப்பட்டவர்கள் தொட்ட குழுவிற்குப் போய்ச் சேர்ந்து கொள்ள வேண்டும்.

இதுபோல, 5 முறை ஓடச் செய்யலாம். 5 ஓட்டங்களுக்குப் பிறகு, அதிகமான ஆட்டக்காரர்களை சேர்த்துக்