பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

57


அவர்களைத் தவிர சிலையாக நிற்பவர்களைப் பார்த்து முன்போல் நடந்துவரச் செய்ய வேண்டும். அவரும் முன்னர் எண்ணியதுபோல 1, 2 என்று எண்ணத் தொடங்கி, அவர்கள் நடந்து வர, பிறகு 10 எண்ணிக்கை முடிந்து திரும்பிப் பார்க்க, அவர்கள் உடனே சிலையாக நிற்க வேண்டும். நிற்காதவர்கள் ஆட்டமிழப்பார்கள் என்று ஆட்டம் தொடரும்.

குறிப்பு: இந்த ஆட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், ஆட்டக்காரர்கள் விரைவாக நடந்து போய் எண்ணியவர் திரும்பிப் பார்ப்பதற்கு முன்னேயே அவரைப்போய் தொட்டுவிட வேண்டியதுதான். ஆனால் அவர் 10 என்று முடித்துவிட்டால், உடனே சிலையாக நின்றுவிட வேண்டும். பிறகு அவரை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும். -

32. தப்பி ஓடும் ஆட்டம்

(Dodge Ball)

ஆட்ட அமைப்பு: 40 லிருந்து 80 ஆட்டக்காரர்கள் வரை இந்த ஆட்டத்தில் ஈடுபடுத்தலாம். அத்தனை ஆட்டக்காரர்களையும் சம எண்ணிக்கையுள்ள இரண்டு குழுக்களாக முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு குழுவிலுள்ள ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைக் கைகளைக் கோர்த்து, பெரிய வட்டம் ஒன்றைப் போடச் செய்ய வேண்டும். அவர்கள் நிற்கும் இடம் எது என்பதைக் குறிக்க, காலால் சிறு வட்டம் ஒன்றையும் போடச் செய்துவிட வேண்டும். பிறகு, கோர்த்த கைகளை விட்டு விட்டு, அவரவர்கள் தனித் தனியே நின்று கொண்டிருக்க வேண்டும்.