பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

75


பக்கத்திலிருப்பவர் முதுகின்மேல் குதிரையேறிக் கொண்டு தப்பித்துக் கொள்ளலாம்.

இல்லைன்யென்றால், அருகில் நிற்கும் இன்னொரு வரைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டாலும் தப்பித்துக் கொள்ளலாம். -

குறிப்பு: பிறர்மேல் குதிரையேறித் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் தானே குதிரையாகி மற்றவரை ஏற்றிக் கொண்டும் தப்பித்துக் கொள்ளலாம். எது செளகரியமோ அதைச் செய்யலாம். தொடப்பட்டவர் விரட்டுபவராக மாற மீண்டும் ஆட்டம் தொடரும்.


46. தொட்டால் ஒட்டி ஆட்டம்

(Chain Tag)

ஆட்ட அமைப்பு: குதிரையேற்றம் ஆட்டத்திற்குரிய அமைப்பு போல்தான். மற்ற ஆட்டக்காரர்கள் குறிப்பிட்ட ஆடுகளப் பரப்பிற்குள் நிற்க, விரட்டித் தொடுபவர் விரட்டித் தொட ஆரம்பிப்பார்.

ஆடும் முறை: தப்பி ஓடுபவர்களில் ஒருவரை விரட்டித் தொடுபவர் தொட்டு விட்டால், தொடப்பட்டவர் தொட்டவரோடு சேர்ந்து கொள்வார். இருவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு மற்றவர்களை விரட்டித் தொடுவார். அவர்களால் தொடப்பட்டவர் விரட்டுபவர்களோடு சேர்ந்து கொள்ள, மூவரும் விரட்டித் தொட முயற்சிப்பார்கள்.

இவ்வாறு, ஆட்டக்காரர்களைத் தொடத்தொட ஒட்டிக் கொள்பவர்கள் மாறி மாறி, விரட்டுபவர்கள் அதிகமாகி தப்பி ஓட்டுபவர்கள் ஓரிருவர் என்று வரும்வரை ஆடலாம்.