பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


வேண்டும். இதற்குள் எத்தனை பேர் அந்தத்தடையை மீறி எல்லையை அடைந்தனர் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்த விசில் ஒலிக்குப் பிறகு, அடுத்த குழுவினர் முன்னேற, மறு குழுவினர் தடுத்து ஆடுவர்.

குறைந்தது 6 வாய்ப்புகளுக்குப் பிறகு எந்தக் குழுவினர் அதிக எண்ணிக்கையில் எதிர்க்குழுவினரின் எல்லையைக் கடந்தனர் என்று கணக்கிட்டு, வெற்றி பெற்ற குழுவை தீர்மானிக்க வேண்டும்.

56. பொம்மையைக் காப்போம்

(Guard the Treasure)

ஆட்ட அமைப்பு: ஆட்டத்தில் பங்கு பெறும் ஆட்டக்காரர்கள் எல்லோரும் ஒருபுறமும் தேர்ந் தெடுக்கப்பட்ட காப்பாளர்(it) ஒருவர்தனியே நின்று தன் கடமையைச் செய்வதில் ஈடுபடும் தன்மையுள்ள ஆட்டம் இது.

மைதானத்தின் நடுவில் 8 அடி விட்டமுள்ள சிறு வட்டம் ஒன்றைப் போட்டு, அதில் ஒரு பொம்மையை வைக்க வேண்டும். (பொம்மை இல்லாவிட்டால் ஒரு பந்து அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளையும் வைத்துக் கொள்ளலாம்.)

பிறகு 20 அடி விட்டமுள்ள வட்டம் ஒன்றைய போட்டு அதற்கு வெளியே மற்ற ஆட்டக்காரர்களை நிறுத்தி வைக்க வேண்டும். -

ஆடும் முறை: சிறு வட்டத்திற்குள்ளே வைத்திருக்கும் பொம்மையை, தனியே நிற்கும் காப்பாளன் (it) காத்து