பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

87


நிற்க, வட்டத்திற்கு வெளியே நிற்பவர்கள் ஒரு பந்தால் பொம்மையைப் பார்த்து அடிக்க வேண்டும். தன் பொம்மை மேல் பந்து படாதவாறு காப்பதுதான் ஆட்டத்தின் நோக்கமாகும்.

இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே, என்று ஆட்டக்காரர்கள் பந்தை வேகமாக உருட்டலாம் எறியலாம். தடுத்துக் காப்பவரைத் திக்குமுக்காடச் செய்துவிட வேண்டும். அப்பொழுதுதான் ஆட்டம் சுவையாக இருக்கும்.

பொம்மை அடிபட்டு விழுந்தால், காப்பாளராக வருகிறார். பிறகு ஆட்டம் முன்போல் தொடர்ந்து நடைபெறும்.