பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


குழுவினரை நோக்கிக் கம்பைப் பிடித்தவாறு குனிந்து கொண்டு பின் செல்ல, குழுவினர் அனைவரும் இரட்டையர் பிடித்து வரும் கம்பினைத் தாண்டிக் குதித்து நிற்க, இரட்டையர் கம்பைப் பிடித்தவாறு கடைசிவ!ை வந்து அங்கிருந்து கம்பை விட்டுவிடாமல் பிடித்தவாறு எல்லைக்கோடு வரை சென்று கடந்த பின், திரும்பி ஓ டத் தொடங்கும் கோட்டிற்கு மீண்டும் வந்து, தங்களுக்கு அடுத்து நிற்கும் இரட்டையரிடம் தந்துவிட்டு குழுவின் கடைசியில் போய் நின்று கொள்ள வேண்டும்.

கம்பினைப் பெற அடுத்த இரட்டையர் ஆளுக்கொரு மூலையில் பிடித்தவாறு, தங்கள் குழுவினர்கால்களுக்குக் கீழே கொண்டு செல்ல அவர்களும் தாவிக் குதித்து நிற்க, இவ்வாறு கடைசிவரை சென்று, பிறகு எல்லைக்கோடு நோக்கி ஓடிச் சென்று, மீண்டும் வந்து தங்களுக்கு அடுத்து நிற்கும் இரட்டையரிடம் தந்துவிட்டு, முதல் இரட்டையரின் பின்னால் போய் நின்று கொள்ள இப்படியே ஆட்டம் தொடரும்.