பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


தெரியாத, மமதை பிடிச்ச ஸ்டூடன்ஸ்? நான் அள்ளிப் போடறதைத் தின்னு வயிறு வளர்க்கற உங்களுக்கு மரியாதை எதுக்கு? என்கிற மாதிரி எங்கிட்டேருந்தும் கோபமாகப் பதில் வரும். ஆனால் நான் சொல்ல மாட்டேன். கோபப்பட மாட்டேன்.”

உடனே கணபதி குறுக்கிட்டு, "ஏன் சுப்பையா நாங்க நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரிச் சொல்ல வேண்டியதையெல்லாம் பக்குவமாகச் சொல்லிப்பிட்டியே. இன்னும் என்ன பாக்கியிருக்கு?" என்றான்.

உடனே மூர்த்தி கணபதியைப் பார்த்து, "நீ வேறே அவனை இன்னும் துாண்டி விடறியா?" என்று அதட்டிவிட்டு "சுப்பையா, அனாவசிய விவகாரம் வேண்டாம். இந்தச் சாப்பாட்டை எங்களாலே சாப்பிட முடியாது. நீ இப்போ எங்களுக்கு வேறே சாப்பாடு போடப் போறியா, இல்லையா" என்று கேட்டான்.

"அதைத்தான் நான் முதல்லேயே உங்களுக்குச் சொல்லிப்பிட்டேனே. நான் இப்போப் போட்டிருக்கிறதே. நல்ல சாப்பாடுதான். அதனாலேதான் மற்ற அத்தனை பையன்களும் ஒண்னும் பேசாமல் சாப்பிட்டுப் போயிருக்காங்க. இதைத் தவிர இங்கே வேறே ரெண்டு சாப்பாடு இல்லே. இதுக்கு மேலே நான் என்னசொல்ல?" என்றான் சுப்பையா.

உடனே மூர்த்தி, "மத்தவங்க வாயை மூடிக்கிட்டுப் போனாங்க என்கிறதுக்காக இது நல்ல சாப்பாடு ஆயிடுமா? அவங்க போவாங்க. எல்லாம் சுத்த பயந்தாங்கொள்ளிப் பசங்க; வாயில்லாப் பூச்சிங்க. ஆனா எங்களை உங்களாலே ஏமாத்த முடியாது. மெஸ்ஸுக்குக் கொடுக்கற பணத்திலே, ஒழுங்கா நல்ல சாமானாவாங்கிப் போடாமெ, நி, குக்கு, வார்டன், லீடர், எல்லாரும் கோஷ்டியாக கொள்ளையடிக்