பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


நமது அரசாங்கம் மாணவர்களுடைய நலனிலே அதிக அக்கறை எடுத்துக்கொண்டு திட்டம் தீட்டி வருகிறது. ஒவ் வொரு மாணவனும், கல்வியில் தீவிர கவனம் செலுத்திப் படித்து, கல்லூரியில் சிறந்த மாணவனுகவும், நாட்டிற்குப் பயனுள்ள நல்ல பிரஜையாகவும் உருவாக வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

அதற்காகவே, மாணவர்களுக்கு மலிவு விலையில் புத்த கங்கள், ஹாஸ்டலுக்கு நியாயமான விலையில் தரமான உணவுப் பொருட்கள், ரேடியோ, டெலிவிஷன் வசதி இது

  • * - - o போன்று மாணவர்களுடைய தன்மைக்காக அரசு அநேக ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

மாணவர்களுக்குத் தங்கள் கல்வியைத் தவிர வேறு சிந்தனைகளுக்கே இனி இடம் இல்லை.

நாடு முன்னேற்றப் பாதையை நோக்கி விரைந்து செல் வதில்தான் நமது முன்னேற்றமும் இருக்கிறது. இதற்குக் கடின உழைப்பையும், காலத்தை விளுக்காத விடா முயற்சி யையும் தவிர வேறு வழியில்லை என்பதை இன்றைய மாண வர் சமுதாயம் உணர்ந்துவிட்டது' என்று கூறினன்.

பாபுவின் உணர்ச்சி வசப்பட்ட, நீண்ட பேச்சைக் கேட்டு, கணபதியும் சேகரும் கைதட்டி மகிழ்ச்சி தெரி வித்தனர்.

'சபாஷ் பாபு. உன்னுடைய இன்றையப் பேச்சு, நம் முடைய மாணவர் மீட்டிங் ஹாலில் நடந்திருக்க வேண்டும். அத்தனை பிரமாதம். ஆனல் பாபு, நீ சொல்லுகிறபடி, எண்ணுகிறபடி, அப்படிப் பூரணமாக மாணவர்கள் இன் னும் மாறிவிடவில்லை. அதற்கான ஆரம்பம்தான் ஆகி யிருக்கிறது’’ என்ருன் சேகர்.

உடனே பாபு, இருக்கட்டுமே, ஒரு சிறந்த காரியத்துக் கான, அல்லது முன்னேற்றத்திற்கான மனமாற்ற ஆரம்பமே ஒரு நல்ல அறிகுறி தானே ? ஆனால் நீ எண்ணிப் பேசுவது