பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


அவனுடைய உறுதியான பேச்சைக் கேட்ட முதல்வர், ‘'நீ சொல்லுவதைக் கேட்கும்போது எனக்கே நம்பிக்கை பிறக்கிறது. அவன் அதைத் திருடும்போதும் பதுக்கி வைக் கும்போதும் நீ ஒளிந்திருந்து பார்த்தாயோ' என்ருர்.

நான் நேரில் பார்க்கவில்லை சார். ஆனல், பார்த்த மாதிரிதான் சார். உண்மை இது. அவ்வளவு நம்பிக்கைக் குப் பாத்திரமான ஒரு நண்பன் கண்ணுரப் பார்த்ததாகக் கூறினன்.

முதல்வர் லேசாகச் சிரித்தார். ஆக மொத்தம் பாபு திருடிக் கொண்டு போனதையோ, அதை அவன் தன்வீட்டில் ஒளித்து வைத்ததையோ நீ கண்ணுரப் பார்க்கவில்லை. சரி, போகட்டும். இப்போது நீ என்ன செய்ய வேண்டும் என்

கிருய்?"

'என்னுடன் தாங்கள் தயவு செய்து கூட வந்தால் பாபு வின் வீட்டில் அதைத் தேடிப் பிடித்துக் கண்டு பிடித்து விடலாம் சார்.’’

முதல்வர் இப்போது சற்று வாய்விட்டே சிரித்தார். 'மூர்த்தி, நீ கண்ணுல் பார்க்காத ஒரு திருட்டை உன்னு டைய ஒரு நண்பன் கூறியதைக் கேட்டு வந்து நீ என்னிடம் பாபுவின் வீட்டை சோதனை போட வேண்டுமென்று கூறு கிருய்?...' என்று முதல்வர் பேசிக் கொண்டு வரும்போதே குறுக்கிட்ட மூர்த்தி, அதைக் கூறியவன் என்னுடைய நண்பன் அல்ல சார். அப்படி இருந்தால் கூட நான் இத்தனை துரம் நம்பியிருக்க மாட்டேன்’ என்று மூர்த்தி கூறிக் கொண்டுவரும்போதே, முதல்வரும் குறுக்கிட்டுக் கேட்டார்.

ஏன், உன்னுடைய நண்பர்களிடம் உனக்கே நம்பிக்கை இல்லையோ?”

'அப்படி இல்லை சார். பாபுவைப் பற்றித் தவருக

எதையாவது பேசி, என் அதிக அன்பைச் சம்பாதித்துக் கொள்ளலாம். அப்படிப் பேசுவது எனக்குப் பிடிக்கும்,