பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


திருப்தியளிக்கும் என்று அவர்கள் எண்ணக் கூடும் என் பதற்காகவே கூறினேன். ஆனல் இதை என்னிடம் கூறிய வன் பாபுவிடம் உயிரையே வைத்திருப்பவன். அதனல் தான் என்னல் அதை நம்பாமலிருக்க முடியவில்லை என்ருன் மூர்த்தி.

உடனே முதல்வர், இப்போது அவன் மனம் மாறி உன் கட்சியில் சேர்ந்து விட்டானே?’ என்று கோட்டார்.

'அப்படி வந்திருந்தால் கூட கட்சிமாறி வருவதற்காக ஏதோ புளுகுகிருன்’ என்று விட்டிருப்பேன். ஆனல், அவன் இன்னும் பாபுவின் கட்சியில்தான் இருக்கிருன். எப் படியாவது தன் இனிய நண்பன் பாபுவை நான் திருத்த வேண்டுமென்றுதான் என்னிடம் வந்து கூறினன்.'

இதைக் கேட்ட முதல்வர் மூர்த்தியினுடைய முகத் தையே சில விடிைகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த முகத்திலிருந்து அவர் புரிந்து கொண்ட விஷயங்கள் அவருடைய உள்ளத்துக்கு வேதனையூட்டின. அந்த வேதனையுடனேயே அவர் கூறினர்.

'மூர்த்தி, அது பாபுவினிடம் அளவிற்கு மீறி அன்பு வைத்திருக்கிற ஒர் உயிர் நண்பன் செய்கிற காரியமாகத் தெரியவில்லையே. தன் அன்பிற்குப் பாத்திரமான பாபு திருட்டுத் தொழிலில் ஈடுபடுவதைக் கண்ணுரக் கண்ட அந்த நண்பன், அதை உன்னிடம் வந்து சொல்லி ஊர் அறியச் செய்வதைவிட அவனே அதைப் பற்றிப் பாபுவிடம் கண்டித் திருப்பதல்லவா விவேகம்? அதுவல்லவா உயர் நட்பின் இலக்கணம். நல்ல பயனையும் அளித்து, தவறை உணர்ந்து திருந்த தன் நண்பனுக்கு அப்படியொரு சந்தர்ப்பத்தையல் லவா பாபுவின் நண்பன் உண்மையானவகை இருந்திருந் தால் அளித்திருப்பான். நீ கூறியவற்றைக் கேட்டதிலிருந்து அவன் பாபுவின் உயிர் நண்பனுக இருக்க முடியாது; ஒரே ஐந்தாம் படை நண்பனுகத்தான் இருக்க வேண்டும்.