பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


மூர்த்தி, நீயும் அந்தத் திருட்டைக் கண்ணுரக் காண வில்லை. அதைப் பற்றி உன்னிடம் வந்து கோள் சொல்லி யிருப்பவன் எவகை இருந்தாலும் அவன் பாபுவின் நண்ப ஞக நிச்சயமாக இருக்க முடியாது. நண்பனைப்போல் அவனிடம் பழகி வரும், அந்தக் கருங்காலியின் பேச்சைக் கேட்டுக் கொண்டா பாபுவின் வீட்டைச் சோதனை போட என்னை அழைக்கிருய்?’ என்று கேட்டார்.

முதல்வருடைய மாறி மாறி வந்த குறுக்குக் கேள்வி களும், வாதங்களும் மூர்த்தியின் மூளையை ஒரேயடியாகக் குழப்பி விட்டன. பளிச் பளிச் சென்று பதில் கூறி வந்த அவன், மேற் கொண்டு என்ன பதில் கூறுவதென்று புரியா மல் ஒரு கணம் தடுமாறினன். மூர்த்தி நல்லவனே கெட்ட வனே அது ஒரு புறம் இருக்கட்டும். நல்லவனுகவோ கெட்டவனுகவோ எப்படியும் தன்னைப் பக்குவமாக உரு மாற்றிக் கொள்ளுமளவிற்குச் சிறந்த புத்திசாலி மாணவர் கள் மத்தியில் அவன் ஒரு ஹீரோ. பேச்சில் அவனே இது வரை யாரும் மடக்கி வென்றது கிடையாது.

ஆனல், பரந்த அறிவும் அநுபவமும் கொண்ட முதல் வர் முன் அவனுடைய திறமையான வாதங்கள் எல்லாம் தோற்றுப்போனதுபோல் கணநேரம் மெளனமாக நின்று கொண்டிருந்தான். முதல்வர் மென்மையான குரலில் கேட்டார்.

'மூர்த்தி, சற்று ஆழ்ந்து யோசித்தாயாளுல் நான் கூறுவதே உனக்கும் சரி என்று படும். நீ நேரில் பார்க்காத போது ஒரு போலி நண்பனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பொறுப்புள்ள ஒரு பதவி வகிக்கும் பாபுவின் வீட்டைச் சோதனை போடப் புறப்படுவதும் அவனே குற்ற வாளி என்று கூறுவதும் என்ன நியாயம்? ஹாஸ்டல் பொருட்கள் காணுமற் போனதில் என்னைவிட யாருக்கு அதிகம் அக்கரை இருக்கமுடியும்?ஆல்ை அதற்காக அவசரப் பட்டு ஒரு காரியம் செய்யலாமா! உண்மைக் குற்றவாளிக்கு உரிய முறையில் தண்டனை அளிக்கவே நானும் காத்திருக்