பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


கிறேன்.’’ என்று முதல்வர் கூறி முடிக்குமுன் மூர்த்தி சற்று படபடப்பாகவே குறுக்கிட்டான். அவனுடைய பேச்சில்

கோபம் ட்றையோடிக் கொண்டிருந்தது.

சார், நீங்கள் காத்திருப்பதற்குள் காரியம் எல்லாம் கெட்டுப் போய்விடும்-அல்லது தலைகீழாக மாறிவிடும். எந்தத் திருடனுவது போ.ஸ்ேகாரனை பக்கத்தில் வைத்துக் கொண்டா திருடுவான்? நான் பார்க்கா விட்டால் என்ன, என்னிடம் வந்து கூறிய நண்பனின் வார்த்தைகளே தான் நம்புகிறேன்.

அவன் ஐந்தாம் படையாகவோ, ஆரும் படையாகவோ இருந்து விட்டுப் போகட்டும். திருட்டுப் போயிருப்பது உண்மை; அந்தத் திருட்டைப் பற்றிச் சிறிது ஆதாரம், அல்லது துப்புக் கிடைத்தாலும் உடனே சோதனைக்குப் புறப்படுவது தானே சார் நியாயம்? அதைவிட்டுவிட்டு பாபு வுக்காக நீங்கள் பரிந்து பேசினல் எப்படி சார்? பாபு வீட்டில், நான் கூறியபடி அந்தப் பொருட்கள் இல்லா விட்டால் அவன் நிரபராதி என்பது நிருபணமாகி விடுகிறது அதன் பிறகு தவருன தகவல் கொடுத்ததற்காகவோ அல்லது வேண்டுமென்றே பாபுவின் நற்பெயருக்கு இழுக்கைத்தேடித் தர முனைந்தேன் என்று குற்றஞ் சாட்டியோ எனக்கு எந்தத் தண்டனை கொடுத்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருக்கிறேன் சார்’ என்று உறுதியோடு கூறினன் மூர்த்தி.

அதற்கு மேலும் மூர்த்தியினிடம் பொறுமை காட்டி அவனுக்கு உபதேசித்துக் கொண்டிருக்க முதல்வரின் மனம் இடங் கொடுக்கவில்லை.

-'கர்வமுள்ளவன் கடவுளை இழக்கிருன். பொருமைக் காரன் நண்பனை இழக்கிருன், கோபக்காரஞே தன்னையே இழக்கிருன்-என்கிற அறிஞர் ஹால்லின் வார்த்தையை அப்படியே நிரூபித்து விட்டாய் மூர்த்தி. சரி புறப்படு. இனி நான் தாமதிக்கவோ தயங்கவோ செய்யும் ஒவ்வொரு நிமிஷ