பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


சற்றைக்கெல்லாம் வேகமாக வெளியே வந்த பாபுவின் அம்மா, 'என்ன அப்படிக் கண்டிப்பான உத்தரவு போட்டு அனுப்பியிருக்கிறீர்கள்? கல்லூரியிலிருந்துதானே வருகி lர்கள்? பிறர் வீட்டில் ஒன்றும் சாப்பிட மாட்டீர்களா?” என்று உரிமையோடு கேட்டாள்.

உடனே முதல்வர், அப்படியொன்றுமில்லை, இனியொரு சமயம், சாவகாசமாய் வந்து சாப்பிடுகிறேன். என்று அவர் கூறி முடிக்கு முன்னர் பாபுவின் அம்மா குறுக்கிட்டு, 'பரவாயில்லை; எங்கள் வீட்டிற்கு முதன் முதலாக வந்திருக் கிறீர்கள்: காபியோ, ஒவலோ கொண்டு வருகிறேன்' என்று திரும்பியபோது, முதல்வர் சற்று உரத்த குரலில் மறுத்தார்!

'தயவு செய்து இந்தமுறை ஏதும் நான் சாப்பிடமாட் டேன்; இனியொருமுறை கண்டிப்பாக உங்கள் வீட்டிற்கு வந்து நீங்கள் கொடுப்பதையெல்லாம் சாப்பிடத்தான் போகிறேன். இப்போது வற்புறுத்தாதீர்கள்’’ என்ருர்.

'பரவாயில்லை, பாபு உள்ளே என்னிடம் எல்லாம் சொன்னன். நீங்கள் எங்கள் வீட்டைச் சோதனை போடப் போவதற். ம் இதற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. இது லஞ்சம் கொடுத்ததாக ஆகிவிடாது; மூர்த்தி அப்படியெல் லாம் சொல்லமாட்டான்; அவனும் எனக்கு பாபு மாதிரி தான்’ என்றபடி அவர்கள் எதிரில் கையிலிருந்த காபி டிரேயை வைத்துவிட்டு பாபுவை உள்ளே கூப்பிட்டாள்.

மூர்த்தி குனிந்த தலை நிமிராமல் இருந்தான். முதல் வருக்கு அங்கு நடப்பவை எல்லாம். ஏதோ ஒரு புதிய உலகைப் பார்ப்பது போல் இருந்தது. இத்தனைக்கும் அவர் அந்த வீட்டிற்கு வருவது அதுவே முதல் தடவை. ஆளுல் பலநாள் பழகியது போல் பாபுவின் தந்தை இல்லை என்கிற குறை தெரியாதபடி வந்தவர்களை எவ்வளவு கண்ணிய மாய் வரவேற்று நடத்துகிருள்? அதுவும் எப்படிப்பட்ட தொரு சூழ்நிலையில்? இது எப்படி சாத்தியம்? என்று