பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


முதல்வர் மனத்தில் எண்ணிக் கொண்டிருக்கும்போதே, பாபு உள்ளே இருந்து இரண்டு டம்ளர் காபியை ஏந்திய படி வாசலை அடைந்து ஒன்றை பியூன் பொன்னுசாமிக்கும் ஒன்றை டிரைவரிடமும் கொடுத்து விட்டுத் திரும்பின்ை.

இதைக் கண்டு வியப்பின் விளிம்பிற்கே சென்று விட்ட முதல்வர், என்ன மூர்த்தி சும்மா உட்கார்ந்திருந்தால் எப்படி, சிக்கிரம் சாப்பிடு, வேலையை ஆரம்பிக்க வேண் டாமா?' என்று அவன் விரலால் கூடத் தொடாதிருந்த காபியை டிரேயிலிருந்து எடுத்து நீட்டினர்.

எனக்கு வேண்டாம் சார்’ என்று சட்டென்று தன் ஆசனத்திலிருந்து எழுந்து இரு கரமும் சுப்பி வேண்டினன் மூர்த்தி.

உடனே அருகிலிருந்த பாபு, முன்பு கூட அவன் எப் போது எங்கள் விட்டிற்கு வந்தாலும் இப்படித்தான் சார் மறுப்பான். அவனுக்கு ரொம்ப சங்கோஜம், ஆளுல் இவன் வீட்டிற்குப் போய், வேண்டாம் என்று மறுத்தால், *“Lóf யாதையாக் குடிக்கிறியா இல்லே சட்டை மேலே ஊத்தவா?’ என்று பயமுறுத்துவான்.

அந்தக் காபியை என்னிடம் கொடுங்க சார்; இப்ப இவன் வாங்கிக் குடிக்கல்லென்ன நிஜமாகவே சட்டையிலே தான் சார் ஊற்றப் போேெறன்: என்ன நீங்கள் மன்னிக்க வேண்டும்’ என்று கூறியபடி முதல்வர் கையிலிருந்த காபியை வாங்கி மூர்த்தியின் முன் நீட்டியபடி நின்ருன்

ւIITւ|.

மூர்த்திக்குத் தலையே சுழல்வது போலிருந்தது. ஏதோ அன்புச் சுழலுக்குள் அகப்பட்டுக் கொண்டு விட்டது போல் சிக்கித் தவித்தது அவன் மனம். விழிகளில் தளும்பிக் கொண்டிருந்த நீர் இமையை உடைத்துக் கொண்டு வந்துவிடும் போலிருந்தது.

பாபுவின் கையிலிருந்த காபி டம்ளரை மூர்த்தி பெற்றுக் கொண்டபோது இருவரது விரல்களும் ஸ்பரிசித்துக்