பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


கொண்டன. ஆதியில் இருவரும் ஒருவரை யொருவர் கட்டிப் புரண்டுகொண்டு இதே வீட்டில் விளையாடின நாட்கள் அவன் நினைவைத் தாக்கின. மறு நிமிஷம், இமைகள் கரை உடைத்துக் கொண்டுவிட்டன.

- ம் ... சீக்கிரம் குடி, அப்புறம் எங்க விட்டுக் காபி உப்புக் கரிக்கிறதென்று சொன்னுல் மற்றவங்க நம்ப மாட்டாங்க’’ என்று தன் காதருகே கூறிய பாபுவை, அப் போதுதான் மூர்த்தி நேருக்கு நேராகப் பார்த்தான். அப் போது- ஓ ! இப்படி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டும் கேலி செய்து கொண்டும் எத்தனை நாட்களைக் கழித்திருப்போம்’ என்று தான் இருவர் உள்ளங்களிலும் எண்ணங்கள் ஒடியிருக்க வேண்டும்.

மூர்த்தி காலி செய்து கொடுத்த டம்ளரை பெற்றுக் கொண்டு பாபு உள்ளே சென்றதும், மூர்த்தியிடம் முதல்வர் என்ன, சோதனையை ஆரம்பிக்கலாமா?’’ என்று கேட்டார்.

மூர்த்தி ஒன்றுமே பேசவில்லை.

'என்ன பதில் பேசாமல் இருந்தால் எப்படி மூர்த்தி? புறப்பட்டு வந்துவிட்டோம். எதற்காக? இங்கே காபி குடித்ததைப்பற்றி ஒன்றும் யோசிக்காதே! அதொன்றும் செஞ்சோற்றுக் கடன் ஆகிவிடாது. அதை பாபுவின் அம்மாவே நமக்கு விளக்கி விட்டாள். யாரானலும் குற் றத்திற்குரிய தண்டனை உண்டு. சொல்லு சீக்கிரம். பாபு எங்கே ஒளித்து வைத்திருக்கிருன் என்று குறிப்பாக ஏதாவது தெரியுமா? இல்லை வீடு முழுவதுமே சோதனை போடுவோமா?’ என்று கேட்டார் முதல்வர்.

உடனே மூர்த்தி, 'எனக்கு எப்படி சார் தெரியும்? நான்தான் கண்ணுல் பார்க்கல்லேன்னு சொன்னேனே, ! என்று மூர்த்தி தழதழத்த குரலில் கூறிக்கொண்டிருக்கும் போதே, ஏண்டா முட்டாள், கல்லூரியிலே நீ இதைச்