பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


"...

ஏனெனில் அதற்குள் பாபுவின் ஹாஸ்டல் திருட்டைத் தங்கள் தலைவர் கண்டு பிடித்து அன்று அதற்காகக் குற்ற வாளிக் கூண்டிலேறி நிற்கும் பாபுவை மூர்த்தி சரமாரியாகக் கேள்விகள் கேட்டுக் கதறவைப்பதைத் தன் நண்பர்கள் பார்த்து மகிழ வேண்டாமா?-இது தான் அவர்களுடைய ஆசை. ஆனல் இன்று

தங்களுடைய நண்பர்களில் ஒருவர் கூட இன்று இங்கு வராதிருக்க வேண்டுமே என்று தான் அவர்கள் ஒவ்வொரு வரும் எண்ணி வெட்கப் பட்டுக்கொண்டிருந்தனர். ஆம்? அவர்களுடைய சதித் திட்டங்கள் எல்லாம் தவிடு பொடி யாகி விஷயமே எல்லாம் தலைகீழாகவல்லவா மாறிவிட்டன.

குற்றவாளியாக நிற்க வேண்டிய பாபுவுக்குப் பதில் மூர்த்தியல்லவா இன்று அந்தக் கூண்டில் ஏறி நிற்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. இதை கணபதியும், சேகரும், இரண்டு நாட்களுக்கு முன்பே அம்பலமாக்கி விட்டார்களே!

பாபுவின் வீட்டிற்கு சோதனை போட முதல்வரை மூர்த்தி அழைத்துச் சென்றதையும் அங்கு மூர்த்தி பல்டி அடித்ததையும், முதல்வர் மூர்த்தியை மார்வாடி கடைக்கு காரில் அழைத்துச் சென்றதையும், அங்கு அடுக்கி வைத் திருக்கும் ஹாஸ்டல் பொருட்களைப் பார்த்து மூர்த்தி மூர்ச் சித்து விழுந்ததையும் தங்களுக்குத் தெரிந்தமட்டில் காலேஜ் முழுக்க அத்தனை பேரிடமும் கணபதியும் சேகரும் தம்பட்டமல்லவா அடித்துத் தீர்த்திருக்கிருர்கள்! இன்று கல்லூரி கலை அரங்குக் கட்டிடத்தில் கூட்டம் விழி பிதுங்கு கிறது என்ருல் அதற்கு அவர்கள் செய்திருந்த பிரசாரமும்ஊட்டியிலிருந்த சஸ்பென்ஸ் நிறைந்த ஆர்வமும்தானே காரணம்?

மூர்த்தி கோஷ்டியினர் இதையெல்லாம் எண்ணித்தான் வெட்கித்து வெளியே வரமுடியாமலும் பயந்து ஒளிந்து கோழையாகி விடவும் முடியாமல் சிக்கித் தவித்தனர்: