பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77


ஆணுல், நான்கு நாட்களுக்கு முன்பு, பாபு தன்னுடைய செகரட்டரி பதவியையும் ராஜினாமாச் செய்துவிட்டு தன் பெயரில் எந்தச் சங்கமும் எந்தக் கூட்டமும் இருக்கக் கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டு பாபு மா. சங்கத்தை *நல் மாணவர் சங்கம் என்கிற பெயரிலும் மாற்றி விட்டான்.

அதன் பிறகு கணபதி, சேகர் மூலம் மூர்த்தி விஷயம் கல்லூரி முழுவதும் அம்பலமாகி விடவே பலர் மூர்த்தி சங் கத்திலிருந்து விலகி நல் மாணவர் சங்கத்தில் சேர்ந்து விட் டனர். அப்படி மேலும் சேர்ந்து இணைய மனமில்லாத ரமேஷ், ராஜு போன்றவர்கள் மூர்த்தியின் பெயரை நீக்கி விட்டு ஆரம்பித்திருப்பதுதான் புதிய நல்மாணவர் சங்கம்’

ஆளுல் இது ஒன்றிலும் சம்பந்த மற்ற சர்வர் சுப்பையா தன் அன்பைத் தெரிவிக்கும் பொருட்டு, தன் சொந்தப் பணத்திலிருந்து பத்து ரூபாய்க்கு ஒரு மாலை வாங்கி என் னிடம் கொடுத்து இதைக் கல்லூரி சிப்பந்திகள் சார்பில் என்று கூறி, பாபுவுக்குப் போட்டுவிடும்படிக் கூறின்ை. ஆனுல் ஏழைச் சுப்பையாவின் அன்புள்ளம் கடலில் கரைத்த பெருங்காயமாக இருக்கக்கூடாது என்று நானுகத்தான் அவன் பெயரை முதலில் குறிப்பிட்டு அவனுக்கு ஒரு பப்ளி சிடியை ஏற்படுத்த வேண்டும் என்று அவ்விதம் கூறினேன். இது சுப்பையாவுக்குப் பிடித்திருக்காது. ஆனல் எனக்கு பிடித்திருக்கிறது செய்து விட்டேன் என்று கூறி அந்த மாணவன் நிறுத்தியதும் அனைவரும் கைதட்டி சுப்பையா வாழ்க, தோழர் பாபு வாழ்க’ என்று பலமாக கோவு மிட்டனர்.

முதல்வர் எதிரிலிருந்த மேஜையைத் தட்டி, அவர்களே அமைதிப்படுத்தியபடிக் கேட்டார். 'என் இனிய மாண வர்களே சுப்பையா வாழ்க, பாபுவாழ்க’ என்று வானளாவக் கத்திய உங்களுக்கு மூர்த்தியும் வாழ்க’’ என்று முணு முணுக்கக் கூட உதடுகளில் ஒருவருக்கும் மன மில்லையே!