பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


இதோ, இடைவேளை மணி அடித்துவிட்டது! தேன் கூட்டை ஒரு குச்சியால் தட்டியவுடன் ஈக்கள் படைதிரண்டு வெளியே வருமே அது போல் அந்த இடைவேளை மணியைத் தட்டியவுடன்தான் மாணவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி.

அத்தனை நேரம் அமைதியாக இருந்த பிராந்தியம் இப்போது ஒரே கூச்சலும், கும்மாளமுமாகக் களை கட்டியிருந்தது.

இதோ கூட்டம்கூட்டமாய் வெளியே திரண்டுவரும் மாணவர்கள், குழாம் குழாமாய்ப் பிரிந்து செல்கிறார்கள்.

அதோ, சற்று ஒதுப்புறமான இடத்தில், அகன்று படர்ந்திருக்கும் அந்த மரநிழலில் சிறு கூட்டமாய்க் கூடியிருக்கிறார்களே-அவர்கள்தான், கல்லூரியின் கவலைக்கும், கண்ணீருக்கும் காரணமானவர்கள்- அவர்களையெல்லாம் நன்றாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஓ! நீங்கள்தான் நுழைவாயிலைக் கடந்து, களத்திற் குதித்து கதைக்கு வந்து விட்டீர்களே! இனிமேல் நீங்கள் அவர்களுடன் பழகுவதற்கும், அவர்களைப் புரிந்து கொள்வதற்கும். பின் தொடர்வதற்கும் குறுக்கே நான் நிற்பது நியாயமில்லையல்லவா! அதோ அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து, ஆவேசமாகப் பேசி அழைக்கிறார்களே; சென்று வாருங்கள்!