பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


கண்ணிர் வடித்தான் என்பதுதான் சரி. அதேைலயே நான் அவனை அப்போதே பூரணமாக மன்னித்து விட்டேன்.

அன்பான மாணவர்களே, அன்பின் வழியது இவ்வுலகம். ஆணவத்தால் எதையும் பெறமுடியாது: யாரையும் அடிமைப்படுத்த முடியாது என்பதை உணர்ந்து திருந்திய மூர்த்தியை நான் மன்னித்துவிட்டதில் உங்களில் எவருக் கேனும் கருத்து வேறுபாடு உண்டா? என்ன ஆலுைம், அவனைத் தண்டித்தே ஆகவேண்டும் என்று எண்ணுகிறவர் கள் உங்களில்யாராவது இருக்கிரு.ர்களா? என்று கேட்டபடி முதல்வர் தன் பேச்சை ஒருகணம் நிறுத்தினர்.

உடனே எதிரிலிருந்த மாணவர் கூட்டம் முழுவதும் ஏகோபித்த குரலில் 'இல்லை இல்லை’ என்று கூறினர்.

முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டுத் தன்

உரையைத் தொடர்ந்தார் :

அன்பார்ந்த மாணவர்களே, மன்னிக்கத் தெரிந்தவனே மகத்தான மனிதன். நீங்கள் மூர்த்தியை மன்னித்து விட்டால் மட்டும் போதுமா? நடந்ததை ஒரு கெட்ட கன வாகப் பாவித்து மறந்து விட்டு மூர்த்தியை முன்போல், உங் களில் ஒருவகை இணைபிரியாத தோழனுக ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்த வேண்டும். அதுவே அவன் எதிர்கால வாழ்க்கைக்கும் அவனது மனப்புண் மாறுவதற்கும் மருந்தாகும்.

ஆன்மாவின் பெருந்தன்மை என்பது, எத்தனை சந்தர்ப் பங்களில் நாம் இரக்கம் காட்டுகிருேம் என்ற அளவைப் பொறுத்ததே என்று மேதை பேக்கன் கூறியதையும்பட்சமாயிருத்தல் என்பது எந்தக் காலத்தும் பழிவாங்குதலி னும் பெருந்தகைமை உடையதே என்கிற ஷேக்ஸ்பியரின் வாக்கை இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு நினைவுபடுத்து கிறேன். -