பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90


பாபுவின்மீது மூர்த்தி எந்தப் பழியும் சுமற்றியது சரியல்ல; அவன் நிரபராதி என்று நான் அறிவித்தவுடன் உங்கள் முகங்களில் பூத்து நின்ற மகிழ்ச்சியையும், விண் அதிர நீங்கள் எழுப்பிய கரவொலியையும் கேட்டுப் பூரித் தேன். ஆனல் இதுமட்டும் போதாது. மூர்த்தியிடம் நீங்கள் மீண்டும் பழகத் துவங்கும்போது, எந்த நெருக்கடி யான கட்டத்திலும் அவனைக் கத்திக் காட்டலாகாது. ஏனெனில் நெறி பிறழுவது மனித இயல்பே.

மிதமான இளம் வெயிலில் வளரவேண்டிய பசுமை யான இளஞ்செடியைப் போன்றவர்கள் நீங்கள். கடும் வெயிலைப் போன்ற கொடிய சூழ்நிலைகளிலிருந்து விவேகமாக உங்களைக் காப்பாற்றிக் கொள்வது என்பது உங்கள் கையில்

தான் இருக்கிறது.

குயவன் கை பச்சை மண்ணேப்போன்ற நீங்கள்விரும்புகிறவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ற அவர்கள் விரும்புகிற பாத்திரங்களாகவெல்லாம் மாருமல் உங்க ளிடம் ஒரு தனித்தன்மை உருவாகட்டும். நீங்கள் அடைய வேண்டிய அன்பு, நேர்மை, சத்தியம், கடமை ஆகிய உயர்வான பாத்திரங்களாக உருவாகுங்கள்.

மூர்த்தியை மன்னித்து, உங்களில் ஒருவகை அன்பு காட்ட நீங்கள் அளித்த வாக்குறுதி என்னைப் பெருமை கொள்ளச் செய்கிறது. இதற்கு மேலும் மூர்த்தி உங்களைப் பார்க்க வெட்கப்பட்டாலோ, வேதனைப்பட்டாவோ அல்லது இந்த மேடைக்கு வரத் தயங்கி, திரைக்குப் பின்னல் துயரத்தோடு நின்று கொண்டிருப்பதாலோ ஏதேனும் பொருள் உண்டா என்பதை நீங்களே கூறுங்கள் என்று முதல்வர் கூறி முடிக்கு முன்னர் கூடியிருந்த மாணவர் கள், இல்லை, இல்லை. நண்பர் மூர்த்தி உடனே மேடைக்கு வரவேண்டும்.மூர்த்தியைக் காண நாங்கள் ஆவலோடு இருக் கிருேம்’ என்று நாற்புறமிருந்தும் குரல் எழுப்பினர்.