பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

105

இந்த நோயும் எய்ட்ஸைப் போல பல்வேறு கட்டங்களில் உருவெடுத்துள்ளதாம். ஆஜானுபாகுவாக உள்ள ஆறடி உயரக்காரர்களின் செங்குத்தான முதுகெலும்புகள் வளைந்து வளைந்து, கைகள் தரையில் தானாய் ஊன்றும் அளவுக்குக் தரைக்குமேல் நீளக் கோடாய் நிற்கின்றனவாம். அப்படி ஆனவர்கள், தவளைபோல் தரையில் உட்காருகிறார்களாம். தவளையாவது குதித்துக் குதித்துத் தாவும்... இவர்களோ ஓணான் மாதிரி நெடுஞ்சாண்கிடையாக ஊர்ந்து போகிறார்களாம். பெரியவர்கள் இப்படியென்றால், குழந்தைகள் நிலைமை இதைவிடக் கொடுமையாம். பிறந்து ஒரு வருட காலத்தில், அவை தவழ்ந்தது உண்மை. ஆனால், அதற்குமேல் எழுந்திருக்க முடியாமல் தவழ்ந்த நிலையிலேயே தலை பெருத்தும், உடல் வளர்ந்தும் கிடக்கின்றனவாம். இப்படி முப்பது வயதுக்கு உட்பட்ட இருபத்தாறு லட்சம் 'குழந்தைகள் உள்ளனவாம். இதனால், தமிழகம் நிலைகுலைந்து நிம்மதியற்றுப் போயிருக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

உலகம் ஆரம்பத்தில் அக்கறை காட்டியது. வெளி நாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் மருத்துவர்களும் செய்தியாளர்களும் தமிழகம் வரத்தான் செய்தார்கள். ஆனால், தவழும் தமிழர்கள் இவர்களின் கால்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, அவற்றில் தலைகளை உருட்டினார்களாம். இன்னும் சில டாக்டர்கள், ஆழம் தெரியாமல் காலைக் கொடுத்துவிட்டு அவஸ்தைப் படுகிறார்களாம். இந்த ரிஸ்க்கையும் மீறிச் சில மனிதாபிமானிகள், கால்களில் ஷாக் அடிக்கும் காலணி களைப் போட்டுக் கொண்டு இவர்களுக்குத் தொண்டாற்ற வந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துவிட்ட சில தவழும் தாதாக்கள், "உலகை ஆண்ட தமிழனிடம் ஒங்களுக்கு என்னடா வேலை...? நாங்கள் இப்போது தமிழ்த் தாய்க்கு