பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

சு.சமுத்திரம்

கும்பிட்டுள்ளன. இதைப் பார்த்து, கமிட்டியில் உள்ள பாகிஸ்தானிய நிபுணரே கண்ணீர் சிந்தியிருக்கிறார்.

இந்தக் கமிட்டி, தவழாத ஒரு சில விதிவிலக்குத் தமிழர்களைச் சந்தித்து, தமிழனின் பாரம்பரியம் பற்றி விவாதித்திருக்கிறது. இந்த மனிதர்களும் போலீஸ் கெடுபிடிகளையும் மீறி கமிட்டியிடம் பேசியிருக்கிறார்கள். காவல் துறையினரும் தவழ்வதால், அவர்களால் நிமிர்ந்து நின்று நடமாடும் முற்போக்குத் தமிழர்களை நெருங்க முடியவில்லை.

நிபுணர் குழு, இதோடு பணி முடிக்கவில்லை. இந்த நோயின் ஒவ்வொரு கட்டத்தையும்பிரதிபலிக்கும் நோயாளிகளைச் சாம்பிளுக்கு ஒன்றாகக் கைப்பற்றி, புதுடெல்லிக்கு கொண்டு வந்தது. மத்திய அமைச்சர்களுடனும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியது. நியூயார்க்கில் ஆலோசனை நடத்தி அறிக்கை தயாரிக்க நினைத்த கமிட்டி, நோயின் கடுமையைக் கருதி புதுடெல்லியிலேயே கூடியது-அவசர அவசரமாய்.

புதுடெல்லி விஞ்ஞான பவனை, சாஸ்திரி பவனில் வைத்தது மாதிரியான புதுப்பவன்... ஒயர்கள் இல்லாத மைக்குகள்... பட்டாலே சுளுக்கை எடுக்கும் பட்டு மெத்தை தரை... எல்லாவற்றுக்கும் மேலாக ஒருத்தர் எந்த மொழியில் பேசினாலும், அந்தப் பேச்சை மண்வாசனையுடன் மொழி பெயர்த்துச் சொல்லும் ரோபாட்டுகள். நிபுணர்கமிட்டியின்தலைவரும் தென்னாப்பிரிக்கருமான டாக்டர் அந்தோணி போத்தா, கான்ஃபரன்ஸ் அறையின் மேடையில் உள்ள சாம்பிள் நோயாளிகளை அவ்வப்போது பார்த்துக் கொண்டே முன்னுரையாய் இப்படிப் பேசினார்.

"இந்த இருபத்திரண்டாம் நூற்றாண்டின் இந்தக் கால