பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



o ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

109

கட்டத்தில் மானுடம் மகத்தான சாதனைகளை நிகழ்த் தியுள்ளது. வானிலேயே விண்வெளி ஒர்க்ஷாப் அமைத்து விட்டோம். புது மணமக்கள், நிலாவுக்கே ஹனிமூனுக்காக போய்வருவது சர்வசாதாரணமாகிவிட்டது. பிற பிளானட் உயிரினங்களோடு பேச்சு வார்த்தை துவங்கிவிட்டது. அத்தனை நோயும் ஒழிக்கப்பட்டு, ஒவ்வொரு மனிதரும் இருநூறு ஆண்டுகாலம் உயிர் வாழ வகை செய்துவிட்டோம். ஆனால், அத்தனை முன்னேற்றங்களையும் தவழ வைப் பதற்கு, மன்னிக்கவும் முறியடிப்பதற்கு வந்ததுபோல், மானுடத்தின் மூலக்கூறாகக் கருதப்படும் திராவிட இனத்தின் மூத்தகுடியான தமிழ்க்குடிக்கு இப்படிப்பட்ட நோய் வந்திருப்பது அதிர்ச்சிக்குரியது. ஆகையால் ஒவ்வொரு நிபுணரும் இதற்கான காரணகாரியங்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.'

வரலாற்றில் பேராசிரியரும், பாகிஸ்தானியருமான டாக்டர் ஜனாப்மியான் முந்திக்கொண்டும் முண்டியடித்தும் கருத்துரைத்தார்.

'வாழ்க்கை என்பது ஒரு வாழ்வாசாவா போராட்டம். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், தகுதி உள்ளவையே வாழ்கின்றன என்றார் டார்வின். இந்தத் தத்துவத்தின் படி, வளர்ச்சி கண்ட மானுட பரிணாம உறுப்பினர்களில் தமிழர்கள் இப்படித் தரையோடு தரையாய் ஒட்டிப் போனது ஆச்சரியமே."

தாவரவியல் நிபுணரும் யூதருமான டாக்டர் சாலமன் தாளமுடியாமல் பதிலடி கொடுத்தார்.

"ஆச்சரியம், ஆதாரமாகாது ஜனாப்... பிரபஞ்சத்தில் எப்படி மேல் கீழ் என்பது கிடையோதோ... அப்படி பரிமாணத்தில் நாம் நினைக்கும் வளர்ச்சி என்று ஒன்றைக் கோடு போட்டுக் காட்ட முடியாது... டார்வின் சுட்டிக்