பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



110

சு.சமுத்திரம் o

காட்டும் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், என்ற வாசகம் முக்கியமானது; அதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெற்றி பெறுபவை அடுத்தகட்ட சந்தர்ப்பத்தில் தோல்வியுறலாம். ஆகையால், தமிழர்கள் இப்படி ஆவதற்கான 'குறிப்பிட்ட சந்தர்ப்பம்’ என்ன என்பதை வரலாற்று வழியாய் விளக்குவதை விட்டுவிட்டு, எனது துறையில் நீங்கள் மூக்கை நுழைப்பது ஆட்சேபத்துக்குரியது!'

ஜனாப் மியான் சும்மா இருந்தபோது, விலங்கியல் பேராசிரியரும் சீனருமான டாக்டர் குவான் சுவாங், தனது துறையும் பரிணாமத்தைப் பற்றியது என்று சொல்வதுபோல் மூக்கோடு சேர்த்து முகத்தையும் நுழைத்தார்.

'பரிணாம வளர்ச்சி போல் எதிர்ப் பரிணாம வளர்ச்சியும் ஏற்படுவது இயற்கை எடுத்துக்காட்டாக மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்த மிகப் பெரிய மிருகமான டினோஸரஸ்... இப்போது ஓணானாகச் சிறுத்துப் போனது. அன்று மிகப் பெரிய தாவரமான ஒருவித மரவகை இப்போது பெரளிச் செடியாகி விட்டது... இப்படி நடமாடும் பல்கலைக்கழகமான தமிழன், தவழும் நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஒருவித பரிணாமமே..."

கமிட்டி சேர்மன் தலையைப் பிய்த்துக் கொண்டார்.

'நீங்களும், உங்கள் பரிணாமமும்... தமிழனின் இந்த நிலைமைக்கான காரணங்கள் எவை எவை... இவற்றைப் போக்குவதற்கான வழி என்ன... என்ன... இதைக் கோடி காட்டாமல் என்ன பேச்சு இது?"

சமூகவியல் நிபுணரான டாக்டர் குவாங் லீ, மலேசிய மொழியில் குறுக்கிட்டார்:

"ஒரு உயிரினம், தான் வாழ்வதற்குரிய வழிமுறையைத் தேர்ந்தெடுப்பதற்கு, உருவில் திரிபு செய்து கொள்வது