பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

113

உணர்வால் மட்டுமல்ல, உடலாலும்.' “தாங்க்யூ... டாக்டர் விஜயரத்னே... சரி, இப்படியாக ஆகிப்போன தமிழர்களை மீட்பதற்குரிய சிகிச்சைமுறையை யாராவது சொல்ல முடியுமா?" மனோவியல் நிபுணர் டாக்டர் கெமிங்கோ பதிலளித்தார். 'எந்த இன மக்களும்-மாய ஹிஸ்டிரியாவால் பாதிக்கப்படுவதுண்டு. ஒரு காலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த சங்ககாலத் தமிழன், இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தனக்கென்று தனி நபர் வழிபாடு என்ற ஒரு போலி உலகைச் சிருஷ்டித்துக் கொண்டான். சுயசிந்தனையையும் தலைவர்களிடம் அடகு வைத்து விட்டு, வெறும் வெங்காயடப்பாவானான். மூளை குறைந்தவனுக்கு முதுகெலும்பு எதற்கு?” 'வாருங்கள்... டாக்டர் கெமிங்கோ... சப்ஜெக்டுக்கு வாருங்கள்' 'வருகிறேன் சேர்மன்... சிகிச்சைக்கு வருகிறேன். தரையோடு தரையாய் வீழ்ந்த இந்தத் தமிழ் நோயாளிகளின் காதுகளில் ,கணியன் பூங்குன்றன் என்ற அரும்பெரும் புலவன் பாடிய 'பெரியோரை வியத்தலும் இலமே! என்ற பாடலை இருபத்து நாலு மணிநேரமும் ஒலிக்கச் செய்ய வேண்டும். பலரை, ஒரே ஒருத்தர்காலில் விழும்படி நடிக்கச் செய்து, அப்படி விழுகிறவர்களை, இந்த நோயாளிகளின் கண் முன்னாலேயே சவுக்கால் அடிக்க வேண்டும்.” காலில் விழும் தலைகளை ஏற்றுக் கொள்வோரிடம் 'கயவர்தான், தங்களைத் தாங்களே வியப்பார்கள்' என்று வள்ளுவர் சொன்ன வாசகத்தை, காதில் குத்தும்படி சொல்ல வேண்டும்.'கன்னித் தமிழ்நாட்டின் கயவாளியே... எம்