பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

சு.சமுத்திரம

மக்களை, காலில் விழ வைத்துச் சிரிக்கிறியே என்று ஒரு பாட்டை எழுதி, அதை அந்தக் கால ஏ.ஆர்.ரஹ்மான் மெட்டில் இசையமைத்து, தமிழகத் தலைவர்கள் அனைவருடைய காதுகளிலும் ஓத வேண்டும். இந்த உணர்வு ஆழ்மனதுக்குச் செல்லும். ஜீன்களில் ஏறும். 270 கோடி தாக்கங்களை உள்ளடக்கும் மூளையின் இயக்கத்தால், இவர்களின் செல்களில் படிப்படியாய் ஜீன் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்பட ஏற்பட, படுத்துப்போன தமிழனின் முதுகெலும்பு மீண்டும் செங்குத்தாக ஆகும். இதற்கு மூன்று தலைமுறை ஆகும். அதுவும் இப்போதே சிகிச்சையைத் துவக்கினால் தான், இன்றைய தவழும் தமிழனின் மூன்றாவது தலைமுறை தேறும்... மீளும்...' கமிட்டி சேர்மன் டாக்டர் அந்தோணி போத்தா, டாக்டர் கெமிங்கோவை நன்றியோடு பார்த்தார். அப்புறம் அனைத்து நிபுணர்களையும் ஒருசேரப் பார்த்துவிட்டு, விவாதத்தை இப்படி ரவுண்ட்டப் செய்தார். “இங்கே நடந்த விவாத விவரங்களையும், எல்லோரும் ஒப்புக்கொண்ட சிகிச்சை முறையையும் ஒர் அறிக்கை நகலாய் எழுதித் தரும்படி இன்ஃபர்மேஷன் சயன்டிஸ்டான டாக்டர் பரமானந்தராயைக் கேட்டுக் கொள்கிறேன். நம் தலைமுறையிலேயே தவழும் தமிழனை நிற்க வைக்க முடியும் என்று நினைத்தேன். ஏமாற்றமும் வேதனையுமே மிச்சம். என்றாலும் இன்றைய தமிழனின் மூன்றாவது தலைமுறைக்காவது முதுகெலும்பு நிமிர்ந்தால் சரிதான்...!"

ஆனந்த விகடன் 14.5.95