உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஏகலைவன்களைத் தேடி…



ந்த மொட்டை மைதானத்திற்கு முடி அலங்காரம் செய்தது போல், மனிதமே மலர்களாகவும், செடி, கொடிகளாகவும் வியாபித்திருந்தது. எட்டடி கம்பத்தில் கால்கள் கட்டப்பட்டு, சலங்கைக் கைகளோடு அந்தரமாய் நின்ற ‘கெக்கலி’ ஆட்டக்காரர்கள்… இறுகக் கட்டிய கண்டாங்கிச் சேலைக்காரிகள்… சல்வார் கமிசுகள்… பஞ்சக் கச்சமும், மஞ்சள் சட்டையும் போட்டிருந்த தேவராட்டக்காரர்கள்… கும்மிப் பெண்கள்… கோலாட்டக்காரர்கள்… என்று பட்டி தொட்டியிலிருந்து வந்த, மாவட்ட ரீதியான இளம் கலைஞர்கள்; எதிரே தோன்றிய மேடையை முகம் சுழித்துப் பார்த்தார்கள்.—ஆனாலும்…

கலெக்டரை காணவில்லை என்று தொலைக்காட்சியில் அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படுமோ என்ற நிலைமை… அவருக்காக காத்து நின்ற கால்கள் கோபங் கோபமாய் தரையில் மிதித்தன… கண்கள் பூத்துப் போயின. மத்திய அரசின் இளைஞர் மன்றம் சார்பில், மாவட்ட அளவில் நடைபெறவிருக்கும் இளம் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிப் போட்டிகளை, காலை பத்து மணிக்கு துவக்கி வைக்க