ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்
119
உள்ள நடுவர் நாற்காலிகளில் மத்தியிலிருந்த நடுத்தர வயதுப் பெண்ணால் தாள முடியவில்லை... காவடி முருகனை கையாட்டிக் கூப்பிட்டு அருகே வரவழைத்து, அழுத்தம் திருத்தமாக உபதேசித்தார்... "கொஞ்சம் மட்டுமரியாதையை மிச்சம் வை, தம்பி. நீ இந்த மாவட்டம் முழுவதும் கோவில் விழாக்களில், காவடி ஆடுகிற நல்ல கலைஞன் என்பது எனக்குத் தெரியும்... உனக்கு இந்த நிகழ்ச்சி இல்லாவிட்டாலும் எத்தனையோ நிகழ்ச்சி கிடைக்கும்... ஆனால் இங்க வந்திருக்கிற சின்னஞ்சிறுசுகளுக்கு இதான் ஆரம்பத்தளம்...இந்தத் தளத்தை போர் களமாக்கிடாதேப்பா' இந்தச்சமயத்தில் அமைப்பாளர் குறுக்கிட்டார். "யோவ் இருந்தா இரு, போகணும்னா போ... ஏன்யா பிராணனவாங்குறே... கவர்மெண்ட் நிகழ்ச்சின்னாஇப்படித் தானிருக்கும்... பயணப்படி... பஞ்சப்படி... கொடுக்கோமே... சும்மாவா...' காவடி முருகன் கண் சிவந்து நின்றபோது, கம்புகளில் கால் கட்டிய இரண்டு இளைஞர்கள் வந்து காவடி முருகனின் கைகளை செல்லமாகப் பிடித்திழுத்தார்கள். உடனே அவன் அடிக்கப் போவது போல் கைகளை ஓங்கியபோது அந்த இளைஞர்களில் ஒருவன், வாய் ஓங்கி கத்தினான். "நாங்க காத்திருக்கல?... நீ மட்டுமா காத்திருக்க... ஒரு பானைச் சோத்துக்கு ஒரு பிடி உப்பா இரு... ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷமாயிடாதே... வந்துட்டான் பெருசா..." - - இந்தக் குழுவின் மாவட்ட அளவிலான அரங்கேற்றமே