பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

121

கையாளப்படாத கால் சதங்கைகள்... மருதாணி போட்ட உள்ளங்கைகள் விரிந்த மலர்களாகவும், விரல்கள் அதன் இதழ்களாகவும், கரங்கள் காம்புகளாகவும் தோற்றம் காட்டின. ஒருத்தி ஒரு பாடலை எடுத்துக் கொடுக்க மற்றவர்கள் தொடுத்தனர்... குறுக்கும் நெடுக்குமாய், வட்டத்துள் சதுரமாய், சதுரத்துள் வட்டமாய், பம்பரமாய் சுழன்றார்கள்... பூங்கொடிகள் ஒன்றோடொன்று. பின்னிக் கொண்டது போன்ற நேர்த்தி... வேகித்த ஒன்றின் சுழற்சியில் எப்படி ஆட்டம் தெரியாதோ அப்படிப்பட்ட நிலைப்பாட்டு ஆட்டம்... நின்றவளே நிற்பது போன்ற வேகச் சுழற்சி... 'கலை மாஸ்டர் விசிலடித்த போது கூட்டம் பதிலுக்கு விசிலடித்து கண்டித்தது. அடுத்து வந்தது கெக்கலி ஆட்டக்காரர்கள். எட்டடி உயரக் கம்புகளில் மனிதக் கம்பங்களாய் நின்றவர்கள், அந்தக் கம்புகளை நகர்த்தி நகர்த்தி மைதானத்தின் மத்திக்கு வந்தார்கள். கர்ணனின் கவசகுண்டலம் போல் உடம்போடு ஒட்டிய ஜிகினாஉடை... ஆண்களும் பெண்களுமாய் விரவிக் கலந்த இந்தக் குழுவினரின் இரண்டு கரங்களிலும் இருவேறு கலர் துணிகள். பக்க மேள ஒலியின் பின்னணியில் கம்புக் கால்களை தாள லயமாக நகர்த்தினார்கள்... அந்தக் கம்புகளே எலும்பும் சதையுமாகி அவர்களை இழுத்துக் கொண்டு போவது போன்ற லாவகம்... ஐயோ விழுந்திடப் போறாங்க... என்பதுபோல் கூட்டம் அவர்களை அண்ணாந்து வாயகலப் பார்த்தது. அவர்கள் குறுஞ்சிரிப்பாய் சிரித்தபடியே, அந்த மரக்கால்களை வேகவேகமாய் நகர்த்தி ஊசி முனை இடைவெளியில் ஒருவரையொருவர் உரசாமல் அங்குமிங்குமாய்ப் பாய்ந்தார்கள். ஆரம்பத்தில் கைதட்டி ஆர்ப்பரித்த கூட்டம், அவர்களின் அடவுகளிலும் அசைவுகளிலும் கட்டுண்டு மெய்