பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

சு.சமுத்திரம்

மறந்து கிடந்தது. கலை மாஸ்டர் விசிலடித்த பிறகுதான் விழித்துக் கொண்டது... கெக்கலி ஆட்டத்திற்குப் பிறகு, கோலாட்டம். அதையடுத்து, இரும்பு வில்களை சலங்கை மணிகளோடு சேர்த்து ஆடிய 'லஸ்ஜிங் ஆட்டம்... அப்புறம் நாட்டுப்புற நடனம்... இவைகளுக்கு மத்தியில் திருஷ்டி பரிகாரமாய், குட்டாம்பட்டி இளைஞர்களின் ரிக்கார்டு டான்ஸ். ஏழெட்டு கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, இறுதியாக வந்தது காவடி முருகனின் குழுவினர். எல்லாக் குழுக்களும் சபைக்கும், நடுவர் குழுவிற்கும் வணக்கம் போட்ட போது, இவனோ, அந்த சபையும், இந்த நடுவர் குழுவும்தான், தனக்கு வணக்கம் போட வேண்டும் என்பதுபோல் 'கீழ் நோக்கிப் பார்த்தான். ஆனாலும் ஆசாமி ஆடக்கூட வேண்டாம்... அப்படியே நின்றால் போதும்...பார்த்துக் கொண்டே இருக்கலாம்... அப்படிப்பட்ட லாவகம்... மெருகான கம்பீரம்... "காவடி முருகன் ஆடுகளத்தின் மத்தியில் நின்றான்... அவன்கூட வந்த இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் நான்கு திசையிலும் போய் நின்று அவனுக்கு சதுராட சதுரம் கட்டினார்கள். கைகளிலும், கால்களிலும் சலங்கை கட்டியவர்கள்... விசில் சத்தத்தை வெளிப்படுத்த முடியாதபடி மேளச் சத்தம்.. உடனே முருகன் தனது குழுவினரை அதட்டலாக நோக்கினான். அவர்களும் அப்படிப் பார்க்கப் பொறுக்காதவர்களாய் முன்னாலும், பின்னாலும் நகர்ந்து, கைகளை அவன் பக்கமாய் நீட்டிக் குவித்தார்கள். இவர்களுக்கு மத்தியில் நின்ற முருகன், கையில் வைத்திருந்த காவடியை தலைக்கு கொண்டு வந்தான். மேளம் உச்சத்திற்கு போனது... உடனே