பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

123

தலையிலிருந்த காவடி கழுத்துக்கு வந்தது... அரைவட்டமான அந்தக் காவடி அவன் கழுத்திலும், தலையிலும் மாறி மாறி முழுவட்டமாய்ச்சுற்றியது... அவன் முதுகிலும், தோளிலும் பிட்டத்திலும் குதி போட்டது... தலையிலே தாவி, கழுத்திலே நழுவி ஒற்றைத் தண்டவாளம் போலான வளைத்து வைத்த முதுகெலும்பில், பாலத்தில் ஓடும் ரெயில் போல் ஓடியது... இவனை ஒரு தளமாக வைத்து காவடி மட்டுமே ஆடுவதுபோன்ற கலை மாயை... இந்த மாயையை கலைப்பதுபோல் அவன் தலைக் காவடியுடன் கீழே குனிந்து தரையில் கிடந்த எலுமிச்சை பழத்தை வாயால் கவ்வி, எலுமிச்சை சாறு தெளித்த ஈரமுகத்தோடு நிமிர்ந்தபோது கூட்டம் வஞ்சனை இல்லாமல் கைதட்டியது. அவனை வாஞ்சையோடு பாாத்து ஆர்ப்பரித்தது... ஒன்ஸ்மோர் கூட கேட்டது. மூன்று மணி நேரம் இடைவிடாது நடைபெற்ற கலை நிகழ்வு போட்டிகள் நிறைவு பெற்றன. இளம் கலைஞர்கள் வேர்வை துவைத்த உடையோடு நெட்டி முறித்தார்கள். அத்தனை கண்களும் ஒன்றாய்க் குவிந்து நடுவர் குழுவையும், தன் உடம்பை தனது குழுவினர். தூசி தட்ட கொடுத்துக் கொண்டிருந்த முருகனையும் மாறி மாறி பார்த்தது. இதற்குள் நடுவர் குழுவின் சார்பில் அந்த அம்மா எழுந்தார்.. நாட்டுப்புற நாட்டிய தேகக் கட்டு... பறவைப் பார்வைக் கண்கள்... மைக்கிற்கு முன்னால் வந்து பற்றற்ற குரலில் பாராமுகமாய் முடிவை அறிவித்தார். "கட்டபொம்மன் கெக்கலி ஆட்டக் குழு, போட்டிகளில் முதலாவதாக வந்து மாநில போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.” கூட்டம் அல்லோகல்லப்பட்டது. பெரும்பாலானகலைக்