பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

சு.சமுத்திரம்

குழுக்கள் காவடி முருகனின் அருகே வந்து, அவனுக்கு பக்கபலமாய் நிற்பதுபோல் நின்றன. முருகன், முடிவை உள்வாங்க முடியாமல் நிலை குலைந்தான்... இவனை வைத்து பிழைப்பு நடத்துவதாக நினைக்கும் அவன் குழுவினர் அவனுக்கு முன்னால் கேடயமாகவும், பின்னால் அம்பரா துணியாகவும் நின்று கொண்டார்கள். சிறிது நேரத்தில் 'சுயத்திற்கு வந்த முருகன், நடுவர் குழுவின் பக்கம்போய், அவர்களின் கண்களில் விரலாட்டுவதுபோல் வெறுப்போடு அந்த தீர்ப்புக்கு தீர்ப்பளித்தான்... 'இது பழிவாங்குற தீர்ப்பு... நான் கலெக்டருக்காக காத்திருக்கிறத கண்டிச்சதுக்காக என்னை தண்டிக்கிற தீர்ப்பு...' காவடி முருகன் பேச்சைத் தொடர்வதற்கு அவசியமில்லாமல் ,ஆங்காங்கே ஆட்சேபணைக் குரல்கள் எழுந்தன... 'நேரு மைய அமைப்பாளர் அப்போ இவரைப் பாத்து கத்தும்போதே எனக்குத் தெரியும். ஏதோ கோல்மால் நடக்கும்னு' 'இந்த கெக்கலி ஆட்டத்து பயலுக இரண்டுபேரும், காவடி முருகனை கையைப் பிடிச்சு இழுத்து தங்களோட அடிமை புத்தியை காட்டினதுக்காக எஜமான்கள் கொடுத்த பரிசு இது...' காவடி முருகன் சபைக்கோ, நடுவர் குழுவுக்கோ வணக்கம் போடாதது தப்புதான். அதுக்காக இப்படியா..." 'அப்பவே... இந்தம்மா... முருகனை கண்டிச்சாங்க... இப்போ நடிக்காங்க.." ,