பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 சு.சமுத்திரம் 0

கூட்டம் இப்போது கும்பலாகி அந்த அம்மாவையே வைத்த கண் வைத்தபடி பார்த்தது...

 அந்த அம்மா அமைதியாகவும், அழுத்தம் திருத்தமாகவும் பேசினார்...
 
 "உங்களுக்கு, மகாபாரத அர்ச்சுனன்தான் வெல்ல முடியாத வீரன். அவனைத்தான் ஆராதிப்பீர்கள்... ஆனாலும் அந்த அர்ச்சுனன்

வீரனாகவில்லை... வீரனாக் கப்பட்டான்... ஆமாம்... காட்டில் எங்கோ குலைத்த பாண்டவர் நாயை அதன் ஒலியின் திசையறிந்து அதைப் பார்க்காமலே அம்பெய்து அதன் வாயை கட்டிப் போட்டவன் ஏகலைவன் என்ற வேடச் சிறுவன்... இதைப் பொறுக்காத விடலை அர்ச்சுனன், துரோணாச்சாரியைத் தூண்டிவிட்டு ஏகலைவனின் கட்டை விரலை, கட்டை ஆக்கியவன். வியாசர், நன் றாகவே விளக்கி இருக்கிறார். ஆனானப்பட்ட அர்ச்சுனனின் இந்தப் பேடித்தனத்தின் பின் புலத்தில்தான் அர்ச்சுனன் வீரனாக கருதப்படுகிறான்... இதை இங்கு நடந்த கலைப் போட்டிக்கும் பொருத்திக் காட்ட முடியும்..."

 அந்தம்மா கூட்டத்தினரைச் சுற்றுமுற்றும் பார்த்தார். அந்தக் கும்பல் இப்போது கூட்டமாக மாறி அந்தம்மாவையும் ஒரு கலைஞராகப் பார்த்தபோது, அவர் தொடர்ந்தார்
"காவடி முருகன், அர்ச்சுனன் மாதிரி அற்புதமான கலைஞன்... ஆனால் தன்னைப் போலவே திறமை மிக்க இரண்டு இளைஞர்களையும், யுவதிகளையும் தான் பிரகாசிப் பதற்காக பின்புலத்து இருளாக்கினார்... குறிப்பாக அந்தப் பெண்களை வயிறு தெரியும்படி கவர்ச்சி உடையில் காட்டி, அவர்களை சினிமாக்

காரிகளாய் நகர வைத்து தன்னை முன்னிலைப் படுத்தினார். ஆனால் கெக்கலி ஆட்டக் கலைஞர்களோ தத்தம்மை முன்னிலைப்படுத்தாமல், குழுவையே முதன்மைப் படுத்தினார்கள். இதில் ஒருவர்