உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

135

கலிங்கன் மன்றாடினான்.

'இல்லண்ணே இல்ல... இவரு அசோசியட் டைரக்டர்... அன்பு வேந்தன்... நைட்ல ஒரே ஒர்க்கு... அதனால தூங்குறார். ஏண்டா எழுதிக் கிழிச்சான்... டைரக்டர் ரூம்ல இருக்காராடா...'

'என்னை டிஸ்டர்ப் பண்ணாத..."

"எழுத்தாளர் மயில்நாதன் வந்திருக்கார்..."

"அதுக்கென்ன இப்போ... மூடக்கெடுக்காத... இயக்குநர் அரூபசொருப அண்ணன் எப்ப வேணுமுனாலும், எந்த நேரத்துலயும் வருவார்... இதுக்கு மேல தொண, தொணக்காதே..."

மயில்நாதனுக்குப் பற்றி எரிந்தது... எழுத்தாளனாக மதிக்காட்டியும், ஒரு மனிதனாகக் கூட அங்கீகரிக்காத அந்தப் 'பசக் காமெடி எழுத்தாளனை பார்க்கவே பிடிக்காமல் வெளியேறப் போனார். அதற்குள் ஒரு டெலிபோன்... தூங்குவது போல் குப்புறக் கிடந்தவன், பாம்பு மாதிரி தலையைத் தூக்கிக் கொண்டே டெலிபோனை எடுத்தான்... பிறகு அலறியடித்து முகத்தைக் கழுவாமல் ஒரு டம்பளரிலிருந்த தண்ணீரையோ, அல்லது விஸ்கியையோ கைகளில் அப்பி, கண்களைத் துடைத்துக் கொண்டு, பீரோவில் தொங்கிய பேண்ட்டை போட்டுக் கொண்டே கலிங்கனிடம் பேசினான். மயில்நாதன் என்ற ஒருவர் அங்கு இருப்பது அவன் கவனத்தைக் கவரவில்லை.

'நடிப்புப் புயல் சந்திர பிம்மன்... 'கீழே காட்டேஜ்ல தங்கியிருக்காராம்...

"அடடே, இங்க எதுக்கு வந்தார்..."நான் கேள்விப்பட்டது சரியாத்தான் இருக்கு... நேற்று