பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 சு.சமுத்திரம் 0

ரசிகைகள் படையெடுப்பால அவருக்கும், அவர் பெண்டாட்டிக்கும் அடிதடியாம்... சரி, இந்தக் கதை நமக்கெதுக்கு... நம்ம இயக்குநர் அங்கே இருக்கார்... நாம இவர... ஒங்க பெயர் என்னங்க... என்னப்பா இவரு ஊமையா... இவரக் கூட்டிக்கிட்டு அங்கே போகணுமாம்; அங்கேதான் ஸ்டோரி டிஸ்கசன்..."

"சந்திரபிம்மனுக்கு மூடு சரியில்லாத டைம்ல எதுக்கு டிஸ்கசன்...?"

"ஒனக்கு அறிவிருக்காடா கலிங்கா... இத்தன நாளு சினிமா உலகத்துல குப்பைகொட்டி என்னடா பிரயோசனம்... நம்ம நடிகர்களுக்கு பெண்டாட்டிகளோடு இல்லாத போதுதான்டா மூடே வரும்... நடிகைகளுக்கும் அடுத்தவள்கள் புருசங்க மேலதான ஆசையே வரும்... முட்டாள்... சரியான முட்டாள்... சரி சரி... புறப்படு... எழுத்தாளரே புறப்படுங்க..."

மயில்நாதன் பல்லைக் கடித்து பொறுமையைக் கடித்தார்... அந்த அசோசியேட் டைரக்டரின் டோன் தன்னை கிண்டலடிப்பது போலிருந்தது. என்ன செய்வது... பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரத்துலதான் ஏறணுமாம்... அதோட இவன வைத்து இயக்குநர் அரூபசொருபனை எடை போடக் கூடாதுதான்...
மயில்நாதன், தன்னைப் பற்றி கவலைப்படாமல் போய்க் கொண்டிருந்தவர்கள் பின்னால், எக்கி எக்கி நடந்தார். அவர்களோடு லிப்டில் ஏறி 'கீழ் நோக்கி', இறங்கி அந்த நட்சத்திர ஹோட்டலின் பின்பக்கம் தலைமறைவாய் உள்ள காட்டேஜ் வந்தார். வாசலிலேயே ஒரு துவார பாலகன்... கலிங்கனும், அன்பு வேந்தனும் அவனிடம் மன்றாட