பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

137

வேண்டியது ஏற்பட்டது... அப்போதுகூட அவர்களோடு இவர் நுழையப் போனபோது கதவை மூடப் போனான்... கலிங்கன்தான் இவர் கையை பிடித்து உள்ளே கடத்திக் கொண்டு போனான். ’பூலோக சொர்க்கம்' என்பார்களே அப்படிப்பட்ட வரவேற்பு அறை... கால்களை உள்வாங்கும் தரைக்கம்பளம்... கண்களை வெளிவாங்கும் சுவர் ஒவியங்கள்... வெல்வெட் சோபாசெட் இருக்கைகள்... செயற்கை பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டது போன்ற சூரிய பல்பு ;கூடவே நட்சத்திர மினி பல்புகள்... எரிந்தனவோ இல்லையோ எரிவதுபோல் தோற்றம் காட்டின. என்றாலும், உள்ளறைக் கதவு அவர்களை வழி மறிப்பதுபோல் சாற்றிக் கிடந்தது. கலிங்கனுக்கோ, அன்பு வேந்தனுக்கோ உள்ளே போகப் பயம்... பல தடவை வசமாக வாங்கிக் கட்டியவர்கள்... போதாகுறைக்கு இவர்கள் போக முடியாத அளவில் ஒரு பெண்ணின் சிணுங்கல் சிரிப்பு... பி.எஸ்.வீரப்பா பாணியில் சிரிப்புகள்... அப்புறம் அழுவது போன்ற உருக்கமான குரல்கள்... ரகசியம் பேசுவது போன்ற முணுமுணுப்பு... இதை அடுத்து அடாதடியான மேஜை தட்டல்கள்... அப்புறம் வசவுகள்... பிறகு வாழ்த்துக்கள்... இதற்கும் பிறகு ஒரே மயான அமைதி... மீண்டும் அந்த அமைதியைக் கிழிக்கும் பூகம்ப சிரிப்புகள்... மயில்நாதன், மற்றவர்கள் நின்றபோது, ஒரு சோபா துண்டில் உட்கார்ந்தார். கதவு திறக்கப்படும்... திறக்கப்படும் என்று காத்திருந்தார். நிமிடக் கணக்கில் நினைப்பு போனதால், மணிகள் சுவடு தெரியாமல் போயின... ஆனாலும் தன்னை சமாதானப்படுத்தி குப்புற விழப்போன சுயமரியாதையைதூக்கிப்பிடித்துக் கொண்டார். ஒரு வேளை