பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

சு. சமுத்திரம்⚪

பேசுங்க... நம்ம ஐயனாருக்கு ஜாம்ஜாமுன்னு கொடை குடுக்கணும்" என்றார் கோவில் பூசாரி.

இந்த பூர்வாங்க ஆலோசனையைப் பற்றி அக்கரைப் படாதது போல், மாடசாமி, காடசாமி, என்ற இரண்டு 'மஸ்தான்கள்'. ஒருவர் காதை இன்னொருவர் கடித்தார். ரகசியமாய்ப் பேசிக்கொண்டே, சிரித்தும் தொலைத்தார்கள். சமீபத்தில் பாரிஸில் உலக ஜோதிட ஆசாமிகள் கூடி, 1985 வாக்கில் உலகில் பேரழிவு ஏற்படலாம் என்று கூறியதை நம்பாதவர்கள் இருப்பதுபோல், காடசாமியும், மாடசாமியும் கூட்டு சேர்ந்தால், ஊரே நாசம் என்பதை நம்பாதவர்கள் உண்டு. அப்படி நம்பாதவர்கள் அந்த இரண்டு ஆசாமிகள் மட்டுந்தான். இருந்தாலும், இந்த மனிதர்களின் விநாசகக் கூட்டால் ஏற்படும் விபரீத விளைவுகளை, ஊர்மக்கள் வேடிக்கை மனப்பான்மையோடுதான் ரசிப்பார்கள். சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை.

“மூவாயிரத்தையும் என்ன செய்யலாம்? சொல்லுங்க நேரமாவுது...” என்றார் பஞ்சாயத்துப் பரமசிவம்.

மாடசாமி முன் மொழிந்தார்.

“நம்ம ஜனங்களுக்கு... நம்ம பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவத்தைப் பத்தித் தெரியும்..அவரு இந்த கிராமத்தில் இருந்து ... சென்னைக்குப் போய் வெற்றியோட திரும்பி இருக்காரு... அதுக்கு இந்த ஊர்ப்பணத்தில... ஒரு பாராட்டு விழா வைக்கணும்...”

கூட்டத்தில் ஒருவர் எழுந்தார். கூடவே அவர் நாவும் எழுந்தது.

“மெட்ராஸுக்குப் போயிட்டு வர்ரது பெரியகாரியமா...?