பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

⚪ஒரு மாமரமும் பல மரங்கொத்தி்ப் பறவைகளும்

13

நம்ம ஆளுங்க எத்தனையோ பேரு மெட்ராஸுக்குப் போயி... அங்கேயே தங்கி... மளிகைக்கடை வச்சிக்கிட்டு இருக்காங்க....இந்த அற்ப விஷயத்துக்கு ஒரு பாராட்டா....”

காடசாமி எழுந்தார். சென்னைக்குச் சென்று மீளல் அற்ப விஷயமா? கொடுமை! கொடுமை!!

“அந்த பயலுக மெட்ராஸிலே தங்கிட்டு நம்ம.. பாட்டியை மறந்துட்டாங்க... (பிரைன் டிரைன்) ஆனால் நம்ம பரமசிவம் சென்னைக்குப்போயி பல பொதுக்கூட்டங்களில் பேசிட்டு வெற்றியோட திரும்பியிருக்கார்...இதுக்கு பாராட்டு விழா வச்சே ஆகணும்.”

“பரமசிவம் பொதுக்கூட்டத்திலே பேசல கேட்டுட்டுத் தான் வந்திருக்கார், அவ்வளவுதான்” என்றார் ஒருவர்.

மாடசாமி, சமாளித்தார்.

“பட்டணத்துல நடக்கிற பொதுக்கூட்டங்களில் பேசுறதை விட அதை கேக்குறத்துக்குத் தான் திறமை வேணும், பொறுமை வேணும், இத நம்ம பரமசிவம் செய்திருக்கார். அதுக்கு நாம பாராட்டுவிழா செய்யணும்.”

காடசாமிக்கு, ஒரு நல்லமுத்து கேள்வி கேட்டான்.

“மெட்ராஸுக்குப் போயிட்டு வர்ரது ஒரு பெரிய விஷயமா? நம்ம மாட்டு வியாபாரி மவன்,ரயில்ல அதுவும் வித்தவுட்ல போயிட்டு எத்தனையோ தடவை பிடிபடாம வந்திருக்கான் இதுக்கு பாராட்டுன்னா அதுக்கும் பாராட்டு வேணும்.”

பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம் கோபத்தை அடக்கிக்கொண்டார். பாராட்டுவிழா இல்லாமல் போயி-