பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சு.சமுத்திரம்⚪

டுமோ? கூட்டத்தில் ஒருவர் “பரமசிவம் ஊரைவிட்டு ஒரேயடியா.... மெட்ராஸுக்குப் போயிருந்தா பாராட்டு விழா வைக்கலாம்” என்று அரைகுறையாக முனங்கினார். உடனே மாடசாமி. “என்னவே சொல்றீரு, சபையில சத்தம் போட்டுசொல்லும்” என்று சொன்னார்.

“ஒண்ணுமில்ல....,நம்ம பரமசிவம்.... பட்டணத்தில சிறப்பா என்னத்தப் பார்த்தாருன்னு சொல்லட்டுமே” என்றார்.

பஞ்சாயத்து பரமசிவம். அதிகப் பிரசங்கம் செய்தார்.

“மெட்ராஸ்ல நல்ல முன்னேற்றம் உதாரணமா அங்க,செத்தவன தேர்ல வச்சி ஜோடிக்கிறாக. பிறகு சிலம்பு மேளம் வச்சி சுடுகாட்டுக்குத் தூக்கிக்கிட்டு போறாங்க.நாம என்னடான்னா பிணத்தைக் கட்டிலுல வச்சே சுமந்துக்கிட்டுப் போறோம். அதனால, நாமும் செத்தவன தேர்ல வச்சுத் தூக்கி சீர்திருத்தம் செய்யனும்... அப்புறம்...”

அப்புறம், அவரை மாடசாமி விடவில்லை. அவரே பஞ்சாயத்தை இடைமறித்துப் பேசினார். நரிக்கு வாயிருந்தால், அதுவும் அப்படித்தான் பேசியிருக்கும்.

“நம்ம பரமசிவம்...பத்தரைமாத்துத் தங்கம்... ஊரையே உயிரா நினைக்கிறவரு..உசிரதுச்சமா எண்ணுறவரு..ஊர்ச் சொத்தைத் தன்னோட சொத்தா பாவிக்கிறவரு.. சென்னைக்குப் போயி... இந்த காட்டாம்பட்டி பண்பாட.. நாகரீகத்த.. நகரத்துல காட்டிவிட்டு வந்திருக்காரு.. முதல் தடவையா ரயில் ஏறி.. நம்ம.. மானத்தையும்.. மெட்ராஸ்ல ஏத்திட்டு வந்திருக்காரு..இவருக்கு இந்த மூவாயிரம் செலவுல.. பாராட்டு விழா வைக்காட்டா.. என் பங்கை பிரிச்சிக் குடுங்கப்பா...என்ன சொல்றீங்க...?”