பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



❍ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

139

சட்டையை இன் செய்து பூனைக்குட்டி மாதிரி நின்ற அரூபசொருபன், எழுத்தாளர் மயில்நாதனை தனக்குத் தெரியும் என்பதுபோல் லேசாய் சிரித்தார்.

எல்லோரும் உட்கார்ந்தார்கள். கலிங்கனையும் அன்பு வேந்தனையும் தவிர... அரூபசொருபன், துருத்திக் கொண்டி ருந்த பேண்ட் பையை மெலிதாக்கி, ஒரு கத்தை நோட்டை எடுத்தார். பிறகு நடிப்புப் புயலிடம் பயபக்தியோடு நீட்டி, 'ஒங்க கையால இதை எழுத்தாளர்கிட்ட கொடுங்கண்ணே' என்றார். நடிப்புப்புயல் அதை வாங்கி, மயில்நாதனைப் பார்த்து ஒரு சினிமா சிரிப்பு சிந்திவிட்டு, அதை நீட்டினார். மயில்நாதனும் அதை மரியாதையாக எழுந்து வாங்கிக் கொண்டார். வாங்கிய வேகத்திலேயே வீட்டு லோகத்தில் மூழ்கினார். இந்தப் பணம், மனைவியை, அவரை முத்தமிட வைக்கும்... மகளை நன்றியோடு பார்க்க வைக்கவில்லை யானாலும், அவளை சமரசமாக நோக்க வைக்கும்... தங்கையை அவரது கரங்களில் அவள் கண்களை ஒற்ற வைக்கும்... மாப்பிள்ளையை, இவரை சம அந்தஸ்த்தில் பார்க்க வைக்கும்... அய்யய்யோ... நான் ரொம்ப, ரொம்ப சுயநலக்காரனாய் போயிட்டேனே... வாச்சாத்தி வழக்கு நிதிக்கு பாதிப் பணத்தை கொடுத்திடணும்...

இயக்குநர் அரூபசொருபன், மயில்நாதனை அவரது வீட்டு லோகத்திலிருந்து, தனது சினிமா லோகத்திற்கு கொண்டு வந்தார்.

'நம்ம தலைவர் நடிப்புப்புயல், ஒங்க கிட்ட கதை கேட்கணுமுன்னே இன்றைக்கு கொடுத்த கால்சீட்டைக் கேன்சல் பண்ணிட்டார்.... அவர்கிட்ட கதையைச் சொல்லுங்க”