பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

சு.சமுத்திரம் ❍

மயில்நாதனுக்கு, சங்கடமாக இருந்தது... அலுவலகத் தில்கூட மேலதிகாரிகளிடம் தனது நூல்களை கொடுத்தது கிடையாது. அப்படி கொடுப்பது, தானே தனது படைப்பை கொச்சைப்படுத்துவதாகும் என்று நினைப்பவர்... இருந்தாலும் இப்போது வேறு வழியின்றி கதையைச் சொல்லத் துவங்கினார்...

மயில்நாதன் கதை சொல்லப் போனபோது, அவருக்கு மாரடைத்தது. வார்த்தைகள் வரவில்லை. இதற்குள் நடிப்புப்புயல் பாசம் பொங்க கேட்டார்.

"கிளைமாக்ஸ்சை மட்டும் சொல்லுங்க போதும்..." மயிலுக்கு சூடு வந்தது.

"நான் கதையைச் சொல்றேன்... நீங்களே எது கிளைமாக்ஸ் என்பதை தீர்மானியுங்க... ஏன்னா எனக்கு அதைப் பத்தியெல்லாம் தெரியாது... ' ஆனாலும் இந்த 'மனித பங்கம்' என்கிற நாவல் ஒரு கற்பனைக் கதையல்ல... பெரியார் மாவட்டத்தில் வாச்சாத்தி என்ற மலைக் கிராமத்தில் நடந்த அட்டுழியங்களை...

"நடிப்புப்புயல்’, தனது தங்கச் சங்கிலி டாலரை தூக்கித் தூக்கி போட்டு பிடித்தபடியே இடைமறித்தார்...

"இந்தாப்பா... அரூபா! வாச்சாத்தி... அருமையான பெயர். நம்ம புதுமுக கதாநாயகிக்கு இந்தப் பெயரையே வச்சுடு... எழுத்தாளரே நீங்க கண்ட்டினியூ பண்ணுங்க..."

மயில்நாதன், எரிச்சலோடு தொடர்ந்தார்.

"பொதுவாக மலைக்கிராம மக்கள் என்றாலே எல்லோருக்கும் இளக்காரம். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை முதலாளிகள் வளைத்துப் போட்டிருக்கும்போது