பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❍ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

141

இந்த அப்பாவி மக்களுக்கு சாகும்போதுதான் நாலடி சொந்தம். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இவர்கள் உயிர் வாழ்வது வரைக்கும் சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள். இப்படித்தான் பெரியார் மாவட்டத்தில் வாச்சாத்தி என்ற மலைக்கிராமத்தின் மீது ஒரு கொடுமை, கொடுரமாக படையெடுத்தது. பெரிய, பெரிய முதலாளிகள் வனத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சந்தன மரங்களையும், தேக்கு மரங்களையும் கண்டதுண்டமாக வெட்டும்போது, அந்த துண்டுகளை தலைகளில் ஏற்றி இறக்கும் எடுபிடிகளாக தாங்கள் இருக்கப் போவதில்லை என்று இந்த மலைக்கிராம மக்கள் பிரகடனப்படுத்தி விட்டார்கள். அவ்வளவுதான்... கள்ளச்சாராயம் காய்ச்சு கிறவன் அதை நிறுத்தினால் அவனுக்கு என்ன கிடைக்குமோ அதைவிட அதிகமாகவே இவர்களுக்கு கிடைத்தது... ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணுற்றிரண்டாம் ஆண்டு ஜூன் மாதம், கொள்ளைக்கார முதலாளிகளின் தூண்டுத லோடு வனத்துறைக் காவலர்கள் ஆயுதபாணியாக படையெடுத்து, இந்த அப்பாவி வாச்சாத்தி கிராமத்திற்குள் நுழைந்தார்கள். மூன்று நாள் முகாமிட்டு கிராமத்து ஆடவர்களை துரத்தியடித்தார்கள். எந்தக் குற்றத்திற்கு இந்த மக்கள் உள்ளாக விரும்பவில்லையோ... அந்தக் குற்றத்தையே சுமத்தி-அதாவது இந்த மலைக்கிராம மக்கள் சந்தனக் கட்டைகளை வெட்டி, கடத்தி மண்ணுக்குள் பதுக்கி வைத்திருப்பதாக, குற்றம்சாட்டி, இவர்களை மண்ணாக் கினார்கள்... இந்தக் கிராமத்தில் பதினெட்டு பெண்களை கற்பழித்தார்கள்."

மயில்நாதன் ,அந்தக் காட்சியை காண விரும்பாதவர்போல் கண்களை மூடினார். பேச்சுக்கு வாய் தடங்கலாகியது. இவரையே குணச்சித்திர பாத்திரமாகப்