142
சு.சமுத்திரம் ❍
போட்டு விடலாமா என்று அரூபசொருபன் நடிப்புப் புயலிடம் கிசுகிசுத்தான். இதற்குள் மயில்நாதன் தன்னை சுதாரித்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார்.
"இந்த அப்பாவி மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளியே சொன்னால் மேலும் விபரீதம் நடக்கலாமென்று அஞ்சி, ஒடுங்கி அலைக்கழிந்தபோது, மார்க்சிஸ்ட் செயலாளர் தோழர் நல்லசிவன் இந்தக் கொடுமையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். பயனில்லாமல் போகவே, மனம் தளராமல் உச்ச நீதிமன்றம் போனார். இந்தக் கொடுமையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று ஒரு தீர்ப்பை வென்றெடுத்தார்... இந்த தீர்ப்பின் செயலாக்கம் இன்னும் தள்ளி போடப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆனாலும் நெருப்பை மூடி வைக்க முடியாது... ஏழைகள் தீக்குச்சி மாதிரி... எந்த பெட்டிக்குள் அடைக்கலமாக இருக்கின்றனவோ அந்த தீக்குச்சுகள் ஒரு நாள் அந்தப் பெட்டியிலேயே உரசும் கட்டம் வரும்... இந்த எதிர்கால கட்டத்தைப் பற்றியும், எலிகளாய் பதுங்கிய இந்த மண் மக்களான இந்த மலைமக்கள் எப்படி புலிகளாக உருமாறுகிறார்கள் என்பதையும் என் நாவலில்..."
"நடிப்புப் புயல்’, மயில்நாதனின் கதைப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி போடாமல், ஒரு கமாபோட்டதுபோல் இடை மறித்தார்.
"இந்தாடா கலிங்கா... என் வீட்ல போய், அவளோட மூடு எப்படி இருக்குன்னு பாத்துட்டு வா... நான் எங்கே இருக்கேன்னு அது கிட்டயே கேளு. அப்படியே நடிகை வேதியாவுக்கு போன் போட்டு இங்க வரச் சொல்லு... 'சாரி எழுத்தாளரே, கன்ட்டினு பண்ணுங்க... அப்போ... ஒங்க கிளைமாக்ஸ்தான் என்ன..."