பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

சு.சமுத்திரம் ❍

பார்த்தார். அதைப் புரிந்து கொண்ட கலைமாமணி அரூப சொருபன், அவரை ஆற்றுப்படுத்தினார்.

"இதுல கதை இல்லியேன்னு நினைக்காதீங்க தலை வரே... கற்பழிக்கப்பட்ட பதினெட்டு பொண்ணு களையும் எப்படி கதாநாயகியாகாட்ட முடியும்னு... நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது தலைவரே... எப்படின்னு கேட்கிறீங்களா... இதுக்கு பேர்தான் வேவ் லென்த் என்கிறது. ஆனால்... திரைக் கதை அமைக்க போறது ஒங்களோட அடிமை சொருபன். திரைக் கதையைச் சொல்றேன் கேளுங்க..."

"இந்த மலைமக்களுக்கு சேவை செய்றதுக்காக ஒரு அறிவு pவிப் பொண்ணு, அந்தக் கிராமத்துக்குப் போறாள். டில்லியிலிருந்து போறாள். கட் பண்றோம்... அப்புறம் அவளுக்கும் எஸ்டேட் முதலாளியான ஒங்களுக்கும் மோதல் உருவாகி, அதுவே காதலாகுது... டுயட் பாடுறிங்க... துள்ளிக் குதிக்கிறீங்க... அள்ளி அணைக்கிறீங்க... கட்...கட்..."

"ஒரு நாள், ஒங்க காதலி தலைவிரிகோலமாய் கன்னத்துல ரத்தக் கீறலோட ஒங்ககிட்ட வர்றாள்... விக்குறாள்... விம்முறாள்... படபடக்கிறாள் அழுகிறாள்... ஒங்க மேல அப்படியே சாய்கிறாள்... நீங்க படபடத்து, துடிதுடித்து காரணம் கேக்கிறீங்க... கட் பண்றோம்... அப்புறம் ப்ளாஷ் பேக் அண்டை மாநில முரடர்கள் இந்த கிராமத்துக்கு வந்து அப்பாவி பெண்களை கற்பழிக்கிறாங்க... அவர்களோடு அவர்களாய் ஒங்க காதலியும் கற்பழிக்கப்படுகிறாள்... கட்... நீங்க கோப ஆவேசம் கொள்ளுறீங்க... அந்தக் கிராமத்துக்கு போறீங்க... அந்த அப்பாவி மக்கள் பட்டபாட்டை சொன்னவுடன் ஆவேசி ஆகிறீங்க... கட்...கற்பழிக்கப் பட்ட... பெண்களில் ஒருத்தியையும், ஒங்க அறிவு ஜீவி காதலியையும் கூட்டிக்கிட்டு, அடுத்த மாநில காட்டுக்கு போlங்க...கற்பழித்த கயவர்களை கண்டுபிடித்து