பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❍ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

145

ஒவ்வொருத்தன் தலையையா வெட்டுறீங்க... வெட்டின தலைகளை கழுத்தில மாலையாப் போடுறீங்க.. கட் பண்றோம்... கிராமத்துக்கு வாரீங்க.. இந்த மாலைத் தலைகளோட ஊழி நடனமாடுறீங்க.. உடனே கிராமத்து மக்கள் ஒங்க காலுல விழுறாங்க. 'எப்படிண்ணே கதை".

நடிப்புப் புயல், கன்னங்களை உப்பி யோசித்த போது, அசோசியேட் டைரக்டரான அன்பு வேந்தன் முந்திரிக் கொட்டையானான். இந்த இயக்குநருக்கு, இந்த திரைக்கதையை சொன்னவனே இவன். இருக்காதா கோபம்..இவனும் பேசினான்.

"இதுல கதை முழுதும் ஒரு செண்டிமென்ட வச்சிருக்கோம் தலைவரே. காதலியோடும், கற்பழிக்கப் பட்ட பெண்ணோடும், நீங்க காட்டுக்குப் போlங்களா.. அங்கே கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கும் ஒங்க மீது காதல் வந்துடுது.. இதனால் அவளுக்கும் ஒங்க காதலிக்கும் கூட மோதல் வருது... நீங்க காதலியை வழக்கப்படி அணைக்காமல் விலகிப் போறிங்க... இதுக்கு கற்பழிக்கப் பட்ட அந்தப் பெண்தான் காரணமுன்னு காதலி நினைக் கிறாள். படம் பாக்கிறவங்களும் நினைக்கிறாங்க.. ஆனால் விசயம் என்னடான்னா, மரணப் படுக்கையில் கிடந்த ஒங்க தாய்க்கு நீங்க ஒரு சத்தியவாக்கு கொடுத் திடுறீங்க.. அதாவது கன்னிமை கழியாத ஒரு பெண்ணுக்குத்தான் தாலி கட்டப் போறதா சத்தியம் செய்றீங்க.. ஆனால் ஒங்க காதலியோ கற்பழிக்கப்பட்டவள். இதனால் நீங்க காதலுக்கும், சத்தியத்துக்குமிடையே அல்லாடு lங்க..கடைசியில காதலிகிட்டேயும் விசயத்தை சொல்லிடுறீங்க.. உடனே அந்த அறிவு ஜீவி காதலி அட்டகாசமாய் சிரிக்கிறாள். ஒங்கள உசுப்பி விடுவதற்காகவே தான் கற்பழிக்கப்பட்டதாய் பொய் சொன்னதாய் சொல்றாள். இதுக்கு அத்தாட்சியாய்