பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

சு.சமுத்திரம் ❍

கற்பழிக்கப்பட்டநாளுல, அவள் டில்லிக்கு ரெயிலுல போன டிக்கெட்டை காட்டுறாள். நீங்க அப்படியே அவளை அலாக்கா தூக்கி தலையில வச்சு கூத்தாடுறீங்க.. கட்.. இதுதான் கிளைமாக்ஸ்...எப்படிண்ணே..."

"தூள் பரப்பிட்ட கண்ணாதுள் பரப்பிட்டே... தலையும் வாலும் புரியாத ஒரு கதையை அழகா மாத்திட்டே..."

'நடிப்புப் புயலின், தீர்ப்பு மயில்நாதனைப் போல, அரூபசொருபனுக்கும் ஆத்திரத்தைக் கொடுத்தது... கடைசியில் இந்த அன்பு வேந்தன் பயல் அவன் புத்தியைக் காட்டிட்டான்... தட்டணும்... தலையைத் தட்டணும்... தலையெடுக்காதபடி தட்டணும்... அதற்குள் முந்தியடிச்சு பேசனும்...

"யோசிக்காதீங்க தலைவரே, இந்தப் படத்தை வெள்ளி விழாவுக்கு கொண்டு போக வேண்டியது ஒங்களோட ஆசீர்வாதத்தில் என்னோட பொறுப்பு... இதுல கற்பழிப்பு இருக்கிறதனால, அதுலயும் பதினெட்டு பேர் கற்பழிக்கப்படுறதால, ஏ.பி.சி. கிளாஸ் மூனுக்கும் ஒரு ரசனை கிடைக்கும்... அந்தப் பெண்கள் கதறும்போது தாய்க்குலம் கண்ணிர் வடிக்கும். 'அறிவு ஜீவி. காதலி பேசுற தத்துவங்களை கேட்டுட்டு 'ஏ'கிளாஸ் ஆடியன்கள் சொக்கிப் போவாங்க... ஒங்க காதலி கற்பழிக்கப்பட்டாள் என்பது தெரிஞ்சதும் 'பி கிளாஸ் ரசிகர்கள் தீக்குளிக்கக் கூடப் போயிடுவாங்க... அதோட புதுமையாய் ஒரு சண்டைக் காட்சி செய்யப் போறேன்... வழுக்கலான பாறையில நீங்க செங்குத்தா நிக்குறீங்க... முடியாதுதான்... ஆனாலும் ஒங்களுடைய "யோகப் பயிற்சி', ஒங்களை அப்படி நிற்க வைக்குது... அங்கிருந்தபடியே எதிரிகளை கால்களைப் பின்பக்கமாதுரக்கி அவங்க தலைகள்ல கொக்கி போடுறீங்க... இது அபாயகரமான சண்டை... வழக்கமாபுக் செய்யுற மாதிரி