பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பொறுத்தது போதாது



தென் திசை தாழாமல் தடுத்தாட் கொள்ள, சிவபெருமானால் அன்று அனுப்பப்பட்ட மாமுனி அகத்தியர், இன்று, தன் திசையாம் தமிழ்த் திசை, தன்னையும் மீறி தாழ்ந்துபோன தாளாமையில், பொதிகையில் இருந்து எழுந்து, கடலுக்குள் கால் வைத்தார்.

ஒரு அலையின் உயரம் கூட இல்லாத, கடல் குடித்த இக்குடமுனி கண்டு, ஆழ்கடல் பயந்து, அலைகளை அவரது காலடியில் மட்டும் விழச் செய்தது. பின்னர், அந்த மாமுனியின் யோகச் சிமிட்டலான கண்சிமிட்டலின் பொருள்புரிந்து, அந்த அலைகளே தோணியாகி, அப்புறம் நீர் மூழ்கி கலமாகி, அம் மாமுனியை அடிவாரத்திற்கு கொண்டு வந்தன.

ஏழு கடல்களும், எட்டுக் கோணங்களும், நான்கு திசைக ளும், ஐந்து பூதங்களும், முக்குணங்களும், பதினோரு இந்திரி யங்களும் சங்கமித்து ஒருமிக்கும், ஆன்மிகப் பாட்டையில் நடைபோட்டார் அகத்தியர்; ஆயிரம் கோடி சூரியப் பிரகாச சுதர்சன சக்கர ஒளியில், இரவென்றே இல்லாத அந்த வைகுண்ட திருத்தலத்தில் அவர் நுழைந்தார். அங்கே-